ஆப்கானிஸ்தான் அணியின் கனவு என்ன ஆனது? கடைசி இரண்டு இடங்களுக்கு ஏற்பட்டுள்ள போட்டி?

இலங்கை, இங்கிலாந்து போன்ற அணிகள் தொடர் தோல்வியை தழுவியதால் அவர்களால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் கனவு என்ன ஆனது? கடைசி இரண்டு இடங்களுக்கு ஏற்பட்டுள்ள போட்டி?

ஐசிசி உலக கோப்பை இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், புள்ளி பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிதான் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இங்கிலாந்து போன்ற அணிகள் தொடர் தோல்வியை தழுவியதால் அவர்களால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஆணிகள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடத்தும் பாகிஸ்தான் நேரடியாக தகுதி பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, யாருமே எதிர்பாராத வகையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு சொல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. 

எனினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும்  என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தென்னாப்பிரிக்க அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி விதித்த தடையால் இலங்கை அணியால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியுமா? தடை பின்னணியில் இவரா?

இதனால் ஆப்கானிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் தற்போது புள்ளி பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது. இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றிருப்பது உறுதியாகி விட்டது. 

ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தை யார் பிடிக்கப் போகிறார்கள் என்பது தான் தற்போது கேள்வியாக இருக்கிறது. இங்கிலாந்தும் பங்களாதேஷ் அணியும் தலா நான்கு புள்ளிகள் உடன் ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கிறார்கள். இங்கிலாந்து அணி இன்று பாகிஸ்தானை வீழ்த்தினால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியும். 

ஒரு வேளை இங்கிலாந்து படுதோல்வியை தழுவினாலும் கூட நெதர்லாந்து அணி இந்தியாவுடன் தோற்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணியால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியும்.

இதனால் எட்டாவது ஆக பிடிக்கப் போவது பங்களாதேஷா இல்லை நெதர்லாந்தா என்ற கேள்விதான் எழுந்துள்ளது.  பங்களாதேஷ் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பது பகல் கனவு. அத்துடன், பலம் வாய்ந்த இந்தியாவை நெதர்லாந்து வீழ்த்துவதும் எளிதானது இல்லை.

இதனால், இந்த இரு அணிகளுக்கும் தங்களுடைய கடைசி ஆட்டத்தில் எவ்வளவு மோசமாக தோற்பதை தவிர்க்கிறார்களோ அதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை கனவை நினைவாக்கி கொள்ளலாம் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...