ஆக்ரோஷமான ஆட்டத்தால் ரோகித், கில் ஜோடி சாதனை... ஆனால் சின்ன ஏமாற்றம்!

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் நெதர்லாந்து பந்துவீச்சை சிதறடித்தார்கள். இருவருமே தங்களுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

ஆக்ரோஷமான ஆட்டத்தால் ரோகித், கில் ஜோடி சாதனை... ஆனால் சின்ன ஏமாற்றம்!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில்  பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகிறக. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் நெதர்லாந்து பந்துவீச்சை சிதறடித்தார்கள். இருவருமே தங்களுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதில் இந்திய அணி நட்சத்திர வீரர்கள் 30 பந்துகளில் அரை சதம் கடந்தார். நான்கு சிக்ஸர்களும் மூன்று பவுண்டரிகளுடன் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில் 51 ரன்னில் வெளியேறினார்.

தொடக்க வீர ரோகித் சர்மா எட்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் அடங்கலாக 54 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து பெவலியின் திரும்பினார். இதன் மூலம் முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா ஜோடி 100 ரன்களை சேர்த்திருக்கிறார்கள். இதன் மூலம் இந்த ஜோடி ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறது. 

அதாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் நடப்பாண்டில் அதிக 100 ரன்களை சேர்த்த ஜோடி என்ற பெருமையை ரோகித் சர்மாவும் கில்லும் படைத்திருக்கிறார்கள். நடப்பாண்டில் ஐந்து முறை 100 ரன்களை கடந்து இருக்கிறார்கள். 

இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இப்ராஹிம் மற்றும் குர்பாஸ் ஆகியோரும் மூன்றாவது இடத்தில் மூன்று முறை 100 ரன்களுக்கு மேல் அடித்து நிஷாங்க மற்றும் கருணரத்ன ஜோடியும் குசல் மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரம ஜோடியும் உள்ளனர். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp