மைதானத்தில் ரிஸ்வானை அடிக்க துரத்திய பாபர் அசாம்.. நடந்தது என்ன?

மைதானத்தில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானை, பாபர் அசாம் பேட்டால் துரத்தி அடிக்க முயன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

மைதானத்தில் ரிஸ்வானை அடிக்க துரத்திய பாபர் அசாம்.. நடந்தது என்ன?

மைதானத்தில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானை, பாபர் அசாம் பேட்டால் துரத்தி அடிக்க முயன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக செயற்பட்ட நிலையில்,  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகினார்.

இதனை அடுத்து டெஸ்ட் கேப்டனாக சான் மசூத், டி20 கேப்டனாக சாகின் ஆப்ரிடியும் செயற்பட்ட நிலையில் பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் பாபர் அசாம் பேட்டிங் செய்தார். 

அப்போது விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் பந்தை பிடித்தார். அப்போது பந்து முடிந்துவிட்டது என நினைத்து பாபர் அசாம் கிரீசை விட்டு வெளியே செல்ல முயன்றார். 

அப்போது பந்தை எடுத்து பாபர் அசாம் ரிஸ்வானை ரன் அவுட் ஆக்கினார்.  இது குறித்து ரிஸ்வான் அவுட் கேட்க மூன்றாம் நடுவர்கள் இதனை அவுட்டா இல்லையா என்று சோதித்தனர். 

அப்போது இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாபர் அசாம் திடீரென்று தனது பேட்டை எடுத்துக்கொண்டு முகமது ரிஸ்வான் அடிக்க ஓடினார். அப்போது பாபர் அசாமிடமிருந்து தப்பிக்க ரிஸ்வான் மைதானத்தில் ஓடினார். 

பாபர் அசாம் நகைச்சுவைக்காக பின்தொடர்ந்து ஓட இதனை பார்த்த சக வீரர்கள் சிரித்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp