171 ரன்களில் சுருண்டு பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த இலங்கை.. இனி என்ன நடக்கும்?

இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அது பாகிஸ்தானுக்கு மறைமுக உதவியாக இருக்கும் என்று ஏற்கெனவே பார்த்தோம்.

171 ரன்களில் சுருண்டு பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த இலங்கை.. இனி என்ன நடக்கும்?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அது பாகிஸ்தானுக்கு மறைமுக உதவியாக இருக்கும் என்று ஏற்கெனவே பார்த்தோம்.

இதனால் இந்த போட்டியை பாகிஸ்தான் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். 

இந்த நிலையில், இலங்கை அணி தங்களுக்கு உதவி செய்யும் என  எதிர்பார்ப்புடன் இருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்துள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் துடுப்பாட்டம் என்றால் என்னவென்றே தெரியாத கத்துக்குட்டிகள் போல இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் இன்று விளையாடினார்கள். 

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய தொடக்க வீரராக களம் இறங்கிய நிஷாங்க இரண்டு ரன்களிலும், கேப்டன் குசல் மெண்டிஸ் ஆறு ரன்களிலும், சமர விக்ரம ஒரு ரன்னிலும், அசலங்க 8 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

கோலி ரொம்ப பிஸி.... பேசுறது இல்ல.. விரக்தியில் யுவராஜ்.. நடந்தது என்ன?

இலங்கை அணி 70 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது எனினும், அதிரடியாக விளையாடிய குசல் பெரேரா 28 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். 

குசல் பெரேரா தனி ஆளாக நின்று இலங்கை அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 51 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்கள் சேர்த்தார். 

தனஜெய டி சில்வா 19 ரன்களிலும், கருணரத்ன 6 ரன்களும் எடுக்க இறுதியில் தீக்சன மட்டும் போராடி 91 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி 46. 4 ஓவரில் 171 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp