இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்கவில்லை? ஆஸ்திரேலியா ஏமாற்றியதா? தீயாகப் பரவும் தகவலின் உண்மை என்ன?

யூடியூப்பில் வெளியான அந்த வீடியோக்கள் அடுத்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் இப்போது பரவி வருகிறது. ஆனால் இது உண்மையா? என்று பார்க்கலாம்.

இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்கவில்லை? ஆஸ்திரேலியா ஏமாற்றியதா? தீயாகப் பரவும் தகவலின் உண்மை என்ன?

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்கவில்லை என்று சமூக ஊடகங்களில், குறிப்பாக யூடியூப்பில் சில வட இந்திய சேனல்களில் இருந்து செய்திகள் வெளியாகின. 

ரோஹித் சர்மா கொடுத்த அந்த கேட்ச்சை டிராவிஸ் ஹெட் தவறவிட்டதாகவும், ஆனால் அது களத்தில் இருந்து நான்காவது அம்பயர் வரை யாருக்கும் தெரியாமல் போனதாகவும் அந்த செய்திகளில் கூறப்பட்டது. 

யூடியூப்பில் வெளியான அந்த வீடியோக்கள் அடுத்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் இப்போது பரவி வருகிறது. ஆனால் இது உண்மையா? என்று பார்க்கலாம்.

உண்மையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் அனைத்தும் தவறானவை. போட்டியின் போதே ட்ராவிஸ் ஹெட், ரோஹித் சர்மா கேட்ச்சை பிடிப்பது பல முறை காட்டப்பட்டது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங், போட்டி வியூகம் என அனைத்து விதத்திலும் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை விட சிறப்பாக இருந்தது. 

ஆனால், பல இந்திய ரசிகர்கள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி முடிவடைந்து நாள்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்தியா தோல்வி அடைந்ததை ஏற்கத் தயாராக இல்லை. இதன் காரணமாக இந்தியாவை ஏமாற்றியதாக சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் வெளிவருகின்றன.

செய்தி சேனல்கள் என்ற பெயரில் யூடியூப்பில் பல போலி சேனல்கள் உள்ளன, அவை தவறான செய்திகளை மட்டுமே வெளியிடுவதன் மூலம் அதிக பார்வைகள், லைக்குகள் மற்றும் சப்ஸ்கிரைப்பர்ஸை அதிகரித்து பணத்தை சம்பாதிக்க முயற்சிக்கின்றன.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...