ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றம்... ஒரு சதம் கூட அடிக்காமல் செல்லும் பாபர் அசாம்!
உலகின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாம், முதல் முறையாக இந்திய ஆடுகளங்களில் களமிறங்கினார். இந்த தொடரில் பாபர் அசாம் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
தரவரிசையில் நம்பர் ஒன் வீரராக உலக கோப்பை போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்த தொடரில் நினைத்ததை போல் விளையாடாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார்.
உலகின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாம், முதல் முறையாக இந்திய ஆடுகளங்களில் களமிறங்கினார். இந்த தொடரில் பாபர் அசாம் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
நடப்பு தொடரில் பாபர் அசாம், அதிக ரன்கள் குவிப்பார் என அனைவருமே எதிர்பார்த்தனர். பாபர் அசாம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் மூன்று அல்லது நான்கு சதம் அடிப்பார் என்று கம்பீர் கணித்தார்.
ஆனால், நடப்பு உலக கோப்பை தொடரில் 4 அரை சதம் அடித்த பாபர் அசாம் அதிகபட்சமாக 74 ரன்கள் அடித்தார். இதில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் அடித்த ஸ்கோர் 5(18), 10(15), 50(58), 18(14), 74(92), 50(65), 9(16), 66*(63) & 38(45) ஆகும். இதன் மூலம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பாபர் அசாம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.
இந்தத் தொடரில் பாபர் அசாம் குறைந்தபட்சம் ஒரு சதம் அடித்து இருந்தால் கூட அது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்ற நிலையில், அவர் இப்படி சொதப்புவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
இந்த நிலையில் பாபர் அசாம், தன்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.