இதனை செய்தால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு.. எழுந்துள்ள கடும் சவால்!
இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஆட உள்ள நிலையில் அந்தப் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே அந்த அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியும்.
2023 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதிய போட்டியில், நியூசிலாந்து அணி பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் அணி கடும் சிக்கலில் உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஆட உள்ள நிலையில் அந்தப் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே அந்த அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியும்.
தற்போது 8 புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள், நியூசிலாந்து அணியை விட மிகக் குறைந்த நெட் ரன் ரேட்டுள்ள உள்ளதால் தங்கள் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நியூசிலாந்து அணியின் நெட் ரன் ரேட்டை முந்த வேண்டும்.
நியூசிலாந்து அணி 0.743 நெட் ரன் ரேட் வைத்துள்ளதுடன், பாகிஸ்தான் அணி 0.036 நெட் ரன் ரேட்டும், ஆப்கானிஸ்தான் அணி -0.338 நெட் ரன் ரேட்டும் வைத்துள்ளன.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக முதலில் பந்து வீசினால் 50 ஓவர்களில் ஆல் - அவுட் செய்து விட்டு, அடுத்து 2.3 ஓவரில் அந்த இலக்கை எட்டினால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும்.
பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தால் 278 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற வேண்டும். அப்போது தான் நியூசிலாந்து அணியின் நெட் ரன் ரேட்டை முந்த முடியும் என்பதுடன் இது தான் அந்த அணிக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு.
இங்கிலாந்து அணி இந்த உலகக்கோப்பை தொடரில் மோசமாக ஆடிய போதிலும் புள்ளிப் பட்டியலில் எட்டு இடங்களுக்குள் இடம் பெற்று சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இடம் பெற முயற்சி செய்யும்.
ஆப்கானிஸ்தான் அணி மோசமான நிலையில் உள்ளது. அந்த அணி 438 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டும் நியூசிலாந்து அணியின் நெட் ரன் ரேட்டை தாண்ட முடியும்.
ஆப்கானிஸ்தான் அணி அடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆடுவதால் இது சாத்தியமான என்று தெரியவில்லை.