10 ரன்களை கூட தாண்டாத கோலி மோசமான சாதனை... இம்முறை மாற்றுவாரா?

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் தான் தோற்ற நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது.

10 ரன்களை கூட தாண்டாத கோலி மோசமான சாதனை... இம்முறை மாற்றுவாரா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணியும் விளையாடவுள்ளன.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் தான் தோற்ற நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது.

இருப்பினும் இந்திய அணி வீரர்கள் மீது ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். விராட் கோலி 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் உட்பட 594 ரன்களை விளாசியுள்ளார்.  இதனால் கோலி தனது கடைசி உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வென்று அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆனால், இதுவரை 3 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடியுள்ளார். 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வெறும் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

அதேபோல் 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 3 போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தில் விராட் கோலி ஆட்டமிழந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கடைசியாக ஆடிய 3 உலகக்கோப்பை தொடர்களின் அரையிறுதி சுற்றிலும் விராட் கோலி வஹாப் ரியாஸ், ஜான்சன் மற்றும் போல்ட் என்று இடதுகை பந்துவீச்சாளர்களிடம் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். 

இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விராட் கோலி வரலாற்றை மாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...