திடீரென பள்ளத்தில் விழுந்த கார்.. பதறியடித்து காப்பாற்றிய முகமது ஷமி
நல்ல வேளையாக பள்ளத்தில் விழுந்த காரில் ஒரே ஒரு நபர் மட்டுமே சென்று இருக்கிறார். அவரும் எந்த காயமும் இன்றி வெளியே வந்தார். ஷமி அந்த நபரை காரில் இருந்து வெளியே வர உதவியுள்ளார்.
வீதியில் தனக்கு முன்னே சென்ற கார் பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான போது, தன் காரை நிறுத்தி விட்டு பதறி அடித்துக் கொண்டு ஓடிச் சென்று அந்த காரில் இருந்த நபரை காப்பாற்றி இருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி.
உத்தரகான்ட் மாநிலம் நைனிடால் நகரத்தில் காரில் சென்று கொண்டு இருந்த முகமது ஷமி காருக்கு முன்னே சென்று கார் ஒன்று சாலையின் ஓரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் பாய்ந்து இருக்கிறது. அதைக் கண்ட உடன் தன் காரை நிறுத்தி விட்டு ஓடிச் சென்றார் முகமது ஷமி.
நல்ல வேளையாக பள்ளத்தில் விழுந்த காரில் ஒரே ஒரு நபர் மட்டுமே சென்று இருக்கிறார். அவரும் எந்த காயமும் இன்றி வெளியே வந்தார். ஷமி அந்த நபரை காரில் இருந்து வெளியே வர உதவியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிற நிலையில், இந்த சம்பவம் குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள முகமது ஷமி, "இவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. நாங்கள் அவரை பாதுகாப்பாக மீட்டோம்." எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஷமியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். சிலர் அந்த நபரை காப்பாற்றிய கடவுள் ஷமி தான் எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.
தலையில் தூக்கி வைக்க வேண்டிய கோப்பை அது.. அதைப் போய்.. முகமது ஷமி கடும் அதிருப்திதலையில் தூக்கி வைக்க வேண்டிய கோப்பை அது.. அதைப் போய்.. முகமது ஷமி கடும் அதிருப்தி
முகமது ஷமி 2023 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருந்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் பத்து போட்டிகளில் ஆடி எடுத்த விக்கெட் எண்ணிக்கையை, ஆறு போட்டிகளில் ஆடிய ஷமி முந்தி முதல் இடத்தை பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.