இந்தியாவுக்கு எதிராக அதிரடி வீரரை களத்தில் இறக்கும் நியூசிலாந்து.. அணியில் முக்கிய மாற்றம்!
ஜேம்ஸ் நீஷம் ஒருநாள் போட்டிகளில் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. இந்திய அணிக்கு எதிராக அவர் மிக சுமாராகவே ஆடி இருக்கிறார்.
2023 உலகக்கோப்பையில் இன்றைய இந்திய அணிக்கு எதிரான அரை இறுதியில், காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் அணியில் இடம் பெறாமல் ஓய்வில் இருந்த ஆல் - ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் அணியில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.
ஜேம்ஸ் நீஷம் வேகப் பந்துவீச்சாளர் என்பதுடன், பேட்டிங்கில் அதிரடி ஆட்டம் ஆடுவார் என்பதாலும், அரை இறுதிப் போட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானம் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் என்பதாலும் ஜேம்ஸ் நீஷம் அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவிப்பார் என கூறப்படுகின்றது.
ஆனால், ஜேம்ஸ் நீஷம் ஒருநாள் போட்டிகளில் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. இந்திய அணிக்கு எதிராக அவர் மிக சுமாராகவே ஆடி இருக்கிறார்.
இந்தியாவின் வெற்றி இவங்க கையில் தான் இருக்கு... உங்களால் நம்ப முடிகிறதா?
இதுவரை 72 ஒருநாள் போட்டி இன்னிங்க்ஸ்களில் பந்து வீசி இருக்கிறார் ஜேம்ஸ் நீஷம். அதில் 71 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அவரது எகானமி ஓவருக்கு 6.26 ஆகும். இந்தியாவுக்கு எதிராக 12 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதில் அவரது எகானமி ஓவருக்கு 6.45 ஆகும்.
ஜேம்ஸ் நீஷம் 65 ஒருநாள் இன்னிங்க்ஸ்களில் பேட்டிங் செய்து 1495 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 28.20. ஸ்ட்ரைக் ரேட் 99.93 ஆகும். இந்தியாவுக்கு எதிராக 10 இன்னிங்க்ஸ்களில் 197 ரன்கள் எடுத்துள்ளார். அதன் சராசரி 22, ஸ்ட்ரைக் ரேட் 95.16 மட்டுமே.
இதனை வைத்து பார்க்கும் போது, எந்த வகையிலும் ஜேம்ஸ் நீஷம் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்க போவதில்லை என்பதே உண்மை. அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகின்றது.