ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலை... கோலி பந்துவீச இதுதான் காரணமா?
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் திடீரென விராட் கோலி பந்துவீச அழைக்கப்பட்டார். இந்திய ரசிகர்கள் தொடர்ந்து விராட் கோலிக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் திடீரென விராட் கோலி பந்துவீச அழைக்கப்பட்டார். இந்திய ரசிகர்கள் தொடர்ந்து விராட் கோலிக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
போட்டி நடந்த பெங்களூரில் கோலி ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். அதனால், கோஷம் அதிகமாக இருந்தது இந்த நிலையில், விராட் கோலியை பந்துவீச அழைத்தார் ரோஹித் சர்மா.
ரசிகர்கள் கோரிக்கைக்கு அமைய தான் ரோஹித் சர்மா இதை செய்தார் என பலரும் நினைத்த நிலையில், உண்மையில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த போது கோலியை அழைத்து இருந்தார் ரோஹித்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து அணி அடுத்து 411 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தியது.
15வது ஓவரின் போது முகமது சிராஜ் ஒரு கேட்ச்சை தவறவிட்டார். அப்போது பந்து அவரது தொண்டையில் வந்து விழுந்தது. முதலில் அவர் சமாளித்து விட்டார். எனினும், அடுத்த ஓவரின் போது அவருக்கு வலி அதிகமாக இருந்ததால் அவர் அறைக்கு திரும்பினார்.
இந்திய அணியில் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களே உள்ளனர், எனவே, ஒரு பந்துவீச்சாளர் காயத்தால் பாதியில் விலகினால் அவரது மீதமுள்ள ஓவர்களை வேறு பகுதி நேர பந்துவீச்சாளர்கள் தான் வீசியாக வேண்டும்.
இதனையடுத்து, மித வேகப் பந்துவீச்சை வீசக் கூடிய விராட் கோலியை அழைத்தார் ரோஹித் சர்மா. அவர் முதல் ஓவரில் 7 ரன்கள் கொடுத்த போதும் தன் இரண்டாவது ஓவரில் 1 ரன் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.
நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் விக்கெட்டை விராட் கோலி வீழ்த்தியதுடன், யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், இது அணியின் சூழ்நிலை கருதி தான் நடந்ததே ஒழிய ரசிகர்கள் கேட்டதற்காக நடக்கவில்லை.
விராட் கோலி இந்தப் போட்டியில் 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில், அடுத்து சுப்மன் கில், சூர்யகுமார் யாதவை பந்து வீச வைத்தார் ரோஹித் சர்மா. 9 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், ரோஹித் சர்மா நீண்ட காலம் கழித்து பந்தை கையில் எடுத்தார்.
அவர் வீசிய 48வது ஓவரில் நெதர்லாந்து அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் ரோஹித் சர்மா.