அப்படியொரு தவறை மட்டும் செய்தால் அவ்வளவுதா.... இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த ஜாம்பவான்!
2023 உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து உள்ள இந்திய கிரிக்கெட் அணி அடுத்து அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.
இந்திய அணி ஒரு சரியாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை அரை இறுதியில் மாற்ற நினைத்தால். நிலைமை மோசமாகிவிடும் என எச்சரித்து இருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ்.
2023 உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து உள்ள இந்திய கிரிக்கெட் அணி அடுத்து அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.
தற்போது அரை இறுதிக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பெரிய அணிகளும் முன்னேறி உள்ளதாக, இந்தியா கவனமாகவே இருக்க வேண்டும்.
இந்த நிலையில், இந்திய வீரர்கள் தற்போது முழு பலத்துடன் போட்டிகளில் ஆடி வெல்வது போலவே இறுதி வரை செல்லாம் என்று நினைக்கும் அணுகுமுறை நன்றாக வேலை செய்துள்ளது. ஆனால், அதில் மாற்றம் செய்தால் நிலைமை மோசமாகி விடும் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் இந்திய அணியை எச்சரித்து இருக்கிறார்.
மேலும், இதுவரை வென்று விட்டாலும், அரை இறுதியில் தோற்று விடுவோமோ என்ற பயம் இருந்தால் எதிர்மறை எண்ணங்களை இந்திய அணி வீரர்கள் சரி செய்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.
இந்திய அணியில் மாற்றம் செய்தாலோ அல்லது பேட்டிங் வரிசையை மாற்றுவது, பந்துவீச்சில் மாற்றம் செய்வது என எதையாவது இந்திய அணி புதிதாக முயற்சிக்க நினைத்தால் அது தோல்விக்கு வழி வகுக்கும் என விவியன் ரிச்சர்ட்ஸ் எச்சரித்துள்ளார்.