டி20 அணியில் இருந்து ரோஹித், கோலியை நிரந்தரமாக நீக்க முடிவு? இனிமேலும் முடியாது.... பிசிசிஐ திட்டம்!

ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2024 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்யும் முடிவில் பிசிசிஐ உள்ளது.

டி20 அணியில் இருந்து ரோஹித், கோலியை நிரந்தரமாக நீக்க முடிவு? இனிமேலும் முடியாது.... பிசிசிஐ திட்டம்!

இந்திய டி20 அணியில் இருந்து மூத்த வீரர்கள் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டு மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2024 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்யும் முடிவில் பிசிசிஐ உள்ளது.

இந்த நிலையில், உலகக்கோப்பையில் ஆடிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் தற்காலிகமாக இளம் வீரர்கள் கொண்ட அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.

எனவே, கட்டாயமாக இந்த இந்திய டி20 அணி, இளம் வீரர்கள் கொண்ட அணியாக இருக்க வேண்டும் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும்,  ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற 35 வயதை ஒட்டி இருக்கும் மூத்த வீரர்களை அணியில் இருந்து நீக்கி விட்டு 30 வயதுக்கு உட்பட்ட வீரர்களை அதிக அளவில் அணியில் சேர்த்து அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு முன் இளம் அணியை தயார் செய்ய வேண்டும் என்பதே பிசிசிஐயின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது டி20 அணி தலைவராக இருக்கும் ரோஹித் சர்மா மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் ரன் குவிப்பாளராக வலம் வரும் விராட் கோலியையும் அணியில் இருந்து நீக்குவது சரியான முடிவாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனினும், இளம் வீரர்கள் கொண்ட அணியை டி20 அணிக்கு தேர்வு செய்யும் போது நிச்சயம் இந்திய அணி புத்துணர்ச்சி பெறும் என பிசிசிஐ கருதுகிறது. 

எனினும், 2007 டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியில் நடந்த மாற்றத்தை வைத்துப் பார்த்தால் இது சரியா? இல்லையா? என்பது புரியும். 2007 காலகட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், ஜாகிர் கான் போன்ற மூத்த வீரர்கள் ஒதுங்கிக் கொள்ள 29 வயதுக்கு உட்பட்ட இளம் வீரர்கள் அணி அப்போது முதல் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்று உலகக்கோப்பை வென்றது. 

அப்போது புதிய கேப்டன், இளம் வீரர்கள் என இந்திய அணி டி20 அணி மட்டுமின்றி, ஒருநாள் அணியிலும் மாற்றங்களை கொண்டு வந்து 2011 உலகக்கோப்பை வெற்றிக்கொண்டது.

அதே போன்ற ஒரு மாற்றத்தை இப்போது டி20 அணியில் செய்தால் அது 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் பலன் கொடுக்கும் என பிசிசிஐ எதிர்பார்க்கிறது. 

2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் கோலிக்கு மட்டும் சிறிய அளவில் வாய்ப்பு உள்ளது. ஆனால், முகமது ஷமி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு நிச்சயம் வாய்ப்பு இல்லை.

இதன்படி, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் நீக்கப்பட்டு விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. அடுத்து டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு வரும் போது நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதுடன், அவரே டி20 அணியின் நிரந்தர கேப்டனாகவும் வாய்ப்பு உள்ளது.

சூர்யகுமார் யாதவ் தற்காலிகமாகவே ஆஸ்திரேலிய டி20 தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp