கோலியின் மீது பந்தை எரிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் அராஜகம்!
உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில் 4 ரன்களிலும், இந்த தொடரில் அதிரடியாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் நான்கு ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி 81 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் விக்கெட்டுகள் கையில் இருக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலியும் கே.எல் ராகுலும் பொறுப்பான ஆட்டத்தை விளையாடி பௌண்டர்களை அடிக்காமல் ஓடியே ரன்களை சேர்த்தனர்.
இந்த நிலையில் விராட் கோலியை வம்பு இழுத்து அவரை கோபப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு மைண்ட் கேம் விளையாடினர். மிச்சல் மார்ஸ் வீசிய ஓவரில் விராட் கோலி அடித்த பந்து நேராக பில்டரிடம் சென்றது. அப்போது ஆஸ்திரேலிய வீரர் விராட் கோலியை நோக்கி பந்தை எறிந்தார்.
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விராட் கோலி பந்தை தடுக்க பார்த்தார். இது விராட் கோலியை வம்பு இழுப்பதற்காக செய்த யுக்தியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தற்போது விராட் கோலி பொறுமையாக விளையாடிகொண்டு பின்னர் இறுதியில் அதிரடியை காட்டினால் அது ஆஸ்திரேலியாவுக்கு பேராபத்தாக அமையும்.
இதனால் இப்போதே விராட் கோலி கோபப்படுத்தி விக்கெட் எடுத்துவிடலாம் என ஆஸ்திரேலியா முயற்சி செய்கிறது. ஆஸ்திரேலியா எப்போதுமே இதுபோன்ற முக்கியமான ஆட்டங்களில் அராஜக விளையாட்டை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.