ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு வந்துள்ள சிக்கல்.. பிசிசிஐயின் அதிரடி திட்டம்... அப்போ அவ்வளவுதானா?

அடுத்து ஒருநாள் அணியில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை மனதில் வைத்து அணித் தேர்வை செய்தாலும், அடுத்த கேப்டனை வளர்க்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. 

ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு வந்துள்ள சிக்கல்.. பிசிசிஐயின் அதிரடி திட்டம்... அப்போ அவ்வளவுதானா?

ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக இந்தி அணியை வழிநடத்தி வரும் நிலையில், அணியில் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ பெரிய திட்டம் ஒன்றை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது 36 வயதாகும் ரோஹித் சர்மாவால் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும் என்பதுடன், 38 வயதுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட் ஆடுவது என்பது மிகவும் கடினமான காரியம்.

அத்துடன், கடந்த சில டி20 தொடர்களில் இளம் வீரர்களுக்கே இந்திய டி20 அணியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த வருடம் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்கப் போவது இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. 

அதனால், டி20 அணியில் இனி ரோஹித் சர்மாவை பார்ப்பது கடினம் என்றும், அடுத்து ஒருநாள் அணியில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை மனதில் வைத்து அணித் தேர்வை செய்தாலும், அடுத்த கேப்டனை வளர்க்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. 

அப்போது தான் 2027 உலகக்கோப்பை தொடருக்கு முன் நல்ல அனுபவம் மிக்க கேப்டன் இந்திய அணிக்கு கிடைப்பார் என்பதால், இந்த ஆண்டுக்குள் ஒருநாள் அணிக்கு அடுத்த கேப்டன் நியமிக்கப்படலாம் என்றும், இது குறித்து பேச ரோஹித் சர்மாவை பிசிசிஐ அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, ரோஹித் சர்மா இப்போதைக்கு  டெஸ்ட் அணியில் மட்டுமே தன் கவனத்தை செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்திய அணியை தயார் செய்யும் அதே நேரத்தில் டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனையும் இந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா தயார் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சூழ்நிலையில், இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் தலைமைத்துவம் விரைவில் முடிவுக்கு வரும் என்றே கூறப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp