சேப்பாக்கம் பிட்ச் போல மாற்ற நினைத்து சொதப்பல்.... இந்திய அணிக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ?
சென்னை சேப்பாக்கம் பிட்ச் போல அகமதாபாத் பிட்ச்சை தயார் செய்ய பிசிசிஐ திட்டம் போட்டு அதில் சொதப்பி இருக்கும் விடயம் குறித்த தகவல் தற்போது வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது.
நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைய போட்டி நடந்த அகமதாபாத் பிட்ச் தான் காரணம் என பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கம் பிட்ச் போல அகமதாபாத் பிட்ச்சை தயார் செய்ய பிசிசிஐ திட்டம் போட்டு அதில் சொதப்பி இருக்கும் விடயம் குறித்த தகவல் தற்போது வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது.
என்னால முடியாது... நானே கவலைல இருக்கேன்... விருது வாங்கிவிட்டு பேசாமல் சென்ற கோலி...ரசிகர்கள் சோகம்!
2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் 3 விக்கெட்களை 2 ரன்கள் எடுத்த நிலையில் இழந்து தடுமாறியது. ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் முதல் சில ஓவர்களில் இந்திய அணியை நிலைகுலைய வைத்தனர். எனினும், அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியில் நடந்த சம்பவங்களை மனதில் வைத்து, பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் அகமதாபாத்தில் பிட்ச்சை தயார் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். அதற்காக, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் மோதிய போது ஆடிய அதே பிட்ச்சை இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்தனர்.
அந்த பிட்ச்சை அப்படியே சென்னை சேப்பாக்கம் பிட்ச் போலவே தயார் செய்ய வேண்டும் என மைதான ஊழியர்களுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், கடைசியில் அந்த பிட்ச் பகலில் பேட்டிங் செய்யவே ஒத்துவராத பிட்ச்சாக மாறி விட்டது.
இனி அவ்வளவுதான், டிசெம்பரில் அமலுக்கு வருகிறது புதிய ஐசிசி விதி... மிஸ் ஆனா 5 ரன் போச்சு!
இந்தியா முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆடியது. வெயில் அடித்த போது அந்த பிட்ச் மிக மந்தமாக இருந்ததால் இந்திய அணியால் ரன் குவிக்கவே முடியவில்லை. எனினும், மாலையில் பிட்ச்சின் தன்மை சற்று மாறியதால் ஆஸ்திரேலிய அணிக்கு ஓரளவு ரன் குவிக்க எளிதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.