இறுதிப்போட்டியில் நின்ற ராசியே இல்லாத நடுவர்.. வச்சு செய்த இந்திய ரசிகர்கள்!

இந்த நிலையில் இந்திய அணிக்கு கொஞ்சம் கூட ஒத்து வராத ராசியே இல்லாத நடுவரான ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ இன்றைய ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டார். 

இறுதிப்போட்டியில் நின்ற ராசியே இல்லாத நடுவர்.. வச்சு செய்த இந்திய ரசிகர்கள்!

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்தது. ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு ஆரம்பம் முதல் பல விஷயங்கள் எதிராகவே நடந்தது. டாஸ் முதல் கடைசி பந்து வரை இந்தியாவுக்கு எதிராகவே அனைத்து விஷயங்களுமே இயற்கையாகவே நடந்தது.

இந்த நிலையில் இந்திய அணிக்கு கொஞ்சம் கூட ஒத்து வராத ராசியே இல்லாத நடுவரான ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ இன்றைய ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டார். 

ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ எப்போதெல்லாம் நடுவராக இருக்கிறாரோ அப்போதெல்லாம் இந்திய அணி தோல்வியை தழுவும். 2019 உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ நடுவராக செயல்பட்டார்.அதில் இந்தியா தோல்வியை தழுவியது.

இதை போன்று நடப்பாண்டில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரிச்சர்ட் கட்டல்ப்ரோ மூன்றாவது நடுவராக இருந்தார். அதிலும் இந்தியா தோல்வியை தழுவியது. 

அதில் அவர் கில்லுக்கு கொடுத்த அவுட் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உலககோப்பை இறுதி போட்டியில் அவரே நடுவராக இருந்த நிலையில் மீண்டும் இந்திய அணி தோற்றது. இதனால் ரசிகர்கள் கடுப்பாகினர். இதனை அடுத்து ரிச்சர்ட் கெட்டில்ப்ரோவுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது. 

அப்போது அவரது பெயரை அழைத்தவுடன் ரசிகர்கள் எதிர்ப்புக் குரலை கொடுத்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ, அதனை தன்னுடைய சிரிப்பால் மறைத்துக் கொண்டார்.

எப்போதுமே பிடிக்காத வீரர்களுக்கு தான் ரசிகர்கள் எதிர்ப்பு கூரல் எழுப்புவார்கள்.ஆனால் ராசி இல்லாத நடுவர் என்பதற்காக ரசிகர்களால் எதிர்ப்பு குரல் எழுப்பப்பட்டது. இதுவே முதல் முறையாகும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp