இந்தியாவின் வெற்றி இவங்க கையில் தான் இருக்கு... உங்களால் நம்ப முடிகிறதா?
கடந்த உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் தோல்வியை வழங்கிய நியூசிலாந்தை பழித்தீர்க்கும் விதமாக இன்றைய ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலாவது அரையிறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
கடந்த உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் தோல்வியை வழங்கிய நியூசிலாந்தை பழித்தீர்க்கும் விதமாக இன்றைய ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அது விராட் கோலி கையில் ரோகித் சர்மா கையிலோ இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்த வேண்டும் என்றால் ஒட்டுமொத்த அணியும் சரியாக விளையாட வேண்டும்.
அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் அனைவரின் கவனமும் டாப் 3 வீரர்கள் மீதுதான் இருக்கிறது. ஆனால் அரை இறுதி போன்ற முக்கிய ஆட்டத்தில் நடுவரிசை வீரர்கள் தங்களுடைய செயல்பாட்டை சரியாக செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
நியூசிலாந்துகு எதிரான அரையிறுதியில் இந்திய அணி எவ்வாறு இருக்கும்? சம்பவத்துக்கு வாய்ப்பு இருக்கா?
கடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் கம்பீர் தோனி போன்றோர் தான் இந்திய அணியை காப்பாற்றினார்கள் அதே போல் இம்முறை கே எல் ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் கூட்டணி அமைத்தால் மட்டுமே இந்தியா வெல்ல முடியும்.
இதற்கு காரணம் இருக்கிறது நியூசிலாந்த அணி இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக டாப் 3 வீரர்கள் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். இதனால் ரோகித், விராட் கோலி மற்றும் கில் ஆகியோரை எப்படி ஆட்டம் இழக்க வைக்கலாம் என தனித்திட்டம் எல்லாம் வகுத்து வைத்திருப்பார்கள்.
கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாட வேண்டும். டாப் 3 விக்கெட் விரைவில் ஆட்டம் இழந்தாலும் நடுவரிசை வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும்.
அப்படி நடந்தால் மட்டுமே இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்த முடியும்.