பாகிஸ்தானுக்கு இந்திய அணி வந்தே ஆக வேண்டும்... மிரட்டும் பாகிஸ்தான்.. ஏற்பட்டுள்ள சிக்கல்!

கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் அணி சென்றதில்லை. தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் அங்கு செல்லுமா என்பது சந்தேகம்தான்.

பாகிஸ்தானுக்கு இந்திய அணி வந்தே ஆக வேண்டும்... மிரட்டும் பாகிஸ்தான்.. ஏற்பட்டுள்ள சிக்கல்!

2025 ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு வருமா? என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இப்போதே  கேள்வி எழுப்பி உள்ளதுடன், ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

பாகிஸ்தானில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதுடன், எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. அந்த தொடரில் பங்கேற்க இந்தியா பாகிஸ்தான் செல்லுமா? என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவிலை.

கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் அணி சென்றதில்லை. தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் அங்கு செல்லுமா என்பது சந்தேகம்தான்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற வேண்டிய நிலையில், இந்தியா தொடரில் பங்கேற்காது என்பதால் நான்கு போட்டிகளை தவிர மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெற்றது ஞாபகம் இருக்கலாம்.

அதனால், அதே போலவே சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் இந்தியா பாகிஸ்தான் வராமல் தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுமாறு கோரிக்கை வைக்கலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்வது குறித்து இந்திய அரசு தான் இறுதி முடிவு எடுக்கும் என பிசிசிஐ கடந்த காலங்களில் கூறி உள்ளது. ஏற்கெனவே ஆசிய கோப்பை தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய அதிருப்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இருக்கிறது.

ஒருவேளை இந்திய அணி, பாகிஸ்தான் வரவில்லை என்றால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றது.

அதே போல, இந்தியா வரவில்லை என்றால் ஒப்பந்தத்தில் சில விதிமுறைகளை சேர்க்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு நிபந்தனை விதித்து வருகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp