மூன்றாவது டி20யில் இந்திய அணியில் மாற்றம்? முக்கிய வீரரை களமிறக்கும் ஆஸ்திரேலியா?
இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெறுகிறது.
இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.
இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் பயமின்றி அதிரடியாக விளையாடும் நிலையில், இந்திய அணிக்கு இருக்கும் குறையே பந்துவீச்சு தான். அதற்கு காரணம் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் பிளேயிங் லெவனில் ஆவேஸ் கான் அல்லது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்க வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், வெற்றி பெற்ற அணியை எந்த கேப்டனும் மாற்ற மாட்டார் என்பதால் 99 சதவீதம் அணியில் மாற்றம் இருக்காது என்றாலும், இந்தியாவுக்கு வில்லனாக கருதப்படும் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் களமிறங்குவார் என தெரிகிறது.
உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு டிராவிஸ் ஹெட் கடந்த இரண்டு ஆட்டமாக ஓய்வில் இருந்த நிலையில் தற்போது அவர் களத்திற்கு திரும்புகிறார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முழு பலத்துடன் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறது. ட்ராவிஸ் ஹெட் திரும்புவதால் ஸ்மித் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படுகின்றது.