ரிங்கு சிங்குவை பார்த்து கதிகலங்கிய ஆஸ்திரேலியா... அப்படி என்னதான் நடந்தது?

இஷான் கிஷனும் அதிரடி ஆட்டம் ஆடி 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

ரிங்கு சிங்குவை பார்த்து கதிகலங்கிய ஆஸ்திரேலியா... அப்படி என்னதான் நடந்தது?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் ஆடிய ஆட்டத்தை பார்த்து ஆஸ்திரேலிய அணி கதிகலங்கிப் போயுள்ளது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 53 ரன்கள் அடித்தும், ருதுராஜ் கெய்க்வாட் 43 பந்துகளில் 58 ரன்கள் அடித்தும் அபார துவக்கம் அளித்தனர்.

இஷான் கிஷனும் அதிரடி ஆட்டம் ஆடி 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

கடைசி 2 ஓவர்கள் இருந்த நிலையில் களத்துக்கு வந்தார் ரிங்கு சிங். 19வது ஓவரில் மூன்று ஃபோர், இரண்டு சிக்ஸ் அடித்து 25 ரன்கள் வரக் காரணமாக இருந்தார் ரிங்கு சிங். அப்போதே ஆஸ்திரேலியாவுக்கு கதிகலங்கத் துவங்கி விட்டது.

கடைசி ஓவரில் ரிங்கு சிங்கிற்கு இரண்டு பந்துகள் மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதிலும் ஒரு ஃபோர், 2 சிங்கிள் ரன்கள் எடுத்தார். அந்த ஓவரில் கெய்க்வாட் ஒரு சிக்ஸ், திலக் வர்மா ஒரு சிக்ஸ் அடிக்கவே இந்தியா 20 ரன்கள் சேர்த்தது, 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது.

ரிங்கு சிங் மட்டும் 9 பந்துகளில் 31 ரன்கள் குவித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 344.44 ஆகும். டி20 போட்டிகளில் 200 ஸ்ட்ரைக் ரேட்டே பெரிய விஷயமாக பார்க்கப்படும் நிலையில் 300க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் கொண்டு ரிங்கு சிங் ஆடியதை பார்த்து ஆஸ்திரேலியா மிரண்டு போனது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp