வளைத்து வளைத்து பந்தை பிடித்த ஆஸி.... 97 பந்துகளில் பவுண்டரியே இல்லையே... இந்திய ரசிகர்கர்கள் அதிர்ச்சி!

ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் இந்திய அணி தரப்பில் களமிறங்கிய தொடக்க வீரர் சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

வளைத்து வளைத்து பந்தை பிடித்த ஆஸி.... 97 பந்துகளில் பவுண்டரியே இல்லையே... இந்திய ரசிகர்கர்கள் அதிர்ச்சி!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 97 பந்துகளாக ஒரு பவுண்டரியே அடிக்க முடியாமல் திணறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் இந்திய அணி தரப்பில் களமிறங்கிய தொடக்க வீரர் சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து விராட் கோலி - ரோகித் சர்மா கூட்டணி அதிரடியாக ரன்கள் சேர்த்த நிலையில், சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதன்பின் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மேக்ஸ்வெல் பந்தில் பவுண்டரி விளாச 10 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்கள் சேர்த்திருந்தது. தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் இணைந்த விராட் கோலி - கேஎல் ராகுல் கூட்டணி 10வது ஓவருக்கு பின் இருவரும் ஓடியே ரன்கள் சேர்த்தனர். 11 முதல் 20 ஓவர்கள் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் ரன்கள் சேர்த்தனர். மொத்தமாக 11 முதல் 20 ஓவர்கள் வரை 35 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் பவுண்டரி விளாச முயற்சித்தனர். ஆனால் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அனைவரும் பாய்ந்து பாய்ந்து பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்தனர். 

ஒரு கட்டத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இருவரும் பவுண்டரி அடிக்க முடியாமல் திணற, இறுதியாக மேக்ஸ்வெல் வீசிய 27வது ஓவரில் கேஎல் ராகுல் ஒரு பவுண்டரியை விளாசி தள்ளினார். இதன் மூலமாக இந்திய அணி 97 பந்துகளுக்கு பின் முதல் பவுண்டரியை விளாசியது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp