இந்தியா மற்றம் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2003-2023 போட்டிகளுக்குள் இவ்வளவு ஒற்றுமைகள் இருக்கா? 

2003 மற்றும் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கப்போகிறது.

இந்தியா மற்றம் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2003-2023 போட்டிகளுக்குள் இவ்வளவு ஒற்றுமைகள் இருக்கா? 

2023 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளன. கிரிக்கெட் உலகம் இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு நடைபெறப்போகும் இந்த போட்டி மீது எல்லையில்லா ஆர்வம் கொண்டிருக்கிறது.

2003 மற்றும் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கப்போகிறது.

கிரிக்கெட் வரலாற்றில் இந்த இரண்டு தருணங்களுக்கும் இடையே உள்ள விசித்திரமான ஒற்றுமைகள் மிகவும் சுவாரஸ்யமானது.

2003 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய அணி, 10 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தங்களுடைய இடத்தைப் பெற்றது. இதேபோல், 2023 உலகக்கோப்பையிலும் 10 தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் இந்தியா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

2003ல் இந்தியாவின் தோல்வி

2003 உலகக்கோப்பையில், தென்னாப்பிரிக்காவில் வலிமைமிக்க ஆஸ்திரேலியர்களுக்கு எதிரான மோதலில் இந்தியா தோல்வியடைந்தது, மேலும் தற்போதைய 2023 உலகக் கோப்பையில், ஆஸ்திரேலியா சென்னையில் பெரும் தோல்வியை சந்தித்தது. 

2003 இறுதிப் போட்டிக்கு வருவதற்கு முன்பு 8-போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது, அதேபோல 2023 உலகக்கோப்பையிலும் ஆஸ்திரேலியா 8 போட்டிகளில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.

2003 உலகக் கோப்பையில், ராகுல் டிராவிட் இந்தியாவின் விக்கெட் கீப்பராகப் பொறுப்பேற்றார், அப்போது அவரது திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவர் கையுறைகளை நிர்வகிப்பது மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினார், 11 போட்டிகளில் 318 ரன்கள் குவித்தார்.

2023 உலகக்கோப்பையில், மற்றொரு ராகுல், கே.எல்.ராகுல், இந்தியாவுக்காக விக்கெட் கீப்பிங் செய்வது வரலாறு மீண்டு வருவது போலத் தோன்றுகிறது. காயம் ஏற்பட்டதால் ரிஷப் பந்த் விளையாட முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கே.எல் ராகுல் 10 போட்டிகளில் 386 ரன்கள் குவித்து குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறினார்.

2003 இல், ராகுல் டிராவிட் துணை-கேப்டன் பதவியை வகித்தார், விக்கெட் கீப்பிங், பேட்டிங் என அனைத்திலும் கலக்கினார். அதேபோல், 2023 ஆம் ஆண்டில், ஹர்திக் பாண்டியா துரதிர்ஷ்டவசமாக போட்டியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, கே.எல். ராகுல் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

2003 உலகக்கோப்பையில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் எடுத்து அதிக ரன் எடுத்த வீரராக விளங்கினார். 2023 உலகக்கோப்பையில் அதேபோல விராட் கோலி 711 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த போட்டியில் அதிக ரன் எடுத்த வீரராக உள்ளார்.

2003 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தியது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, பரபரப்பான மேட்ச்க்குப் பிறகு, அவர்களின் மூன்றாவது உலகக் கோப்பையைப் பெற்றனர்.

இப்போது, 2023 இல், இந்தியா இறுதி மோதலில் வெற்றி பெற்றால், இந்தியா மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வெல்லும். 2003 மற்றும் 2023 உலககோப்பையின் நிகழ்வுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளது. இதன்படி கூட்டி கழிச்சு பார்த்தால் இந்த உலகக்கோப்பை நமக்குதான்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp