தோனி விளையாடுவது உறுதியானது.. ஆனால்  கேப்டன் விசயத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ள டிவிஸ்ட்!

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து தற்போது பதில் கிடைத்திருக்கிறது.

தோனி விளையாடுவது உறுதியானது.. ஆனால்  கேப்டன் விசயத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ள டிவிஸ்ட்!

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து தற்போது பதில் கிடைத்திருக்கிறது.

17ஆவது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் வரும் டிசெம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அணியில் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் தொடர்பான பட்டியலை அனைத்து அணிகளும் நவம்பர் 26 ஆம் தேதிக்குள் பிசிசிஐக்கு அனுப்ப வேண்டும்.

இந்த நிலையில் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், தோனி விளையாடவில்லை என்றால் சிஎஸ்கே விடுவித்தவர்கள் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால் இந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாத நிலையில், இதன் மூலம் அடுத்த சீசனில் தோனி நிச்சயம் விளையாடுவார் என்பது உறுதியாகிவிட்டது.அடுத்த சீசனில் ஒருவேளை விளையாடவில்லை என தோனி முடிவெடுத்து இருந்தால், அதனை இப்போதுதான் சொல்லி இருக்க முடியும். 

ஏனென்றால் அதற்கான மாற்று வீரர்களை சிஎஸ்கே மினி ஏலத்தில் எடுத்திருக்கும். இந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இல்லை என்பதால் அவர் நிச்சயம் அடுத்த சீசனில் கேப்டனாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா,  டாஸ் வீசும்போது எப்படி தோனி சர்ப்ரைஸ் கொடுப்பாரோ அதேபோல் ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் தன்னுடைய முடிவை தோனி அறிவிக்கலாம் என்றும், எனினும் தோனி அடுத்த சீசனில் விளையாடுவதாக இருந்தாலும் தொடர்ந்து 14 போட்டிகளில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான் என்றும் கூறியுள்ளார்.

ஏனென்றால், தன்னுடைய உடல் தகுதியை பார்த்துக் கொள்வதற்காக அவ்வப்போது தோனி ஓய்வு கூட எடுத்துக் கொள்ளலாம் என்று ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த சீசனில் தொடர்ந்து விளையாடுவதில்லை என தோனி முடிவு எடுத்தால், 2022ஆம் ஆண்டில் நடந்தது போல் ஜடேஜா தான் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அப்படி இல்லை என்றால் தோனி ஓய்வில் இருக்கும் போட்டியில் ஜடேஜாவோ அல்லது ருதுராஜ் கேப்டனாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp