முக்கிய வீரரருக்கு... கடைசி நேரத்தில் பெரிய பின்னடைவு... இந்திய அணி பிளேயிங் XI இதுதான்... ரசிகர்கள் அதிர்ச்சி!

லீக் சுற்றில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அரையிறுதிதான் இந்திய அணிக்கு பிரச்சினையாக அமைந்திருக்கிறது. 2015, 2019 உலகக் கோப்பையிலும் இப்படிதான் இந்திய அணி லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு, அரையிறுதியில் தோற்றது. 

முக்கிய வீரரருக்கு... கடைசி நேரத்தில் பெரிய பின்னடைவு... இந்திய அணி பிளேயிங் XI இதுதான்... ரசிகர்கள் அதிர்ச்சி!

இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் லீக், அரையிறுதி, பைனல் எதிலும் தோற்காமல் உலகக் கோப்பையை வென்ற அணி என்றால் அது ஆஸ்திரேலிய அணி மட்டுமே. இந்த நிலையில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதேபோல் இந்திய அணி வரலாற்று சாதனையை படைக்க வாய்ப்புள்ளது. 

லீக் சுற்றில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அரையிறுதிதான் இந்திய அணிக்கு பிரச்சினையாக அமைந்திருக்கிறது. 2015, 2019 உலகக் கோப்பையிலும் இப்படிதான் இந்திய அணி லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு, அரையிறுதியில் தோற்றது. 

தற்போதும் அப்படி நடக்க கூடாது என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், வரலாறு வேறு மாதிரியாக இருக்கிறது. 

வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணிதான் வென்றிருக்கிறது. இதனால், அரையிறுதி இந்திய அணிக்கு சவால்மிக்கதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

வான்கடே மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனக் கருதப்படுகிறது. நியூசிலாந்து அணி இந்தியாவை இரண்டு முறை வீழ்த்த இதுதான் முக்கிய காரணமாக அமைந்தது. 

வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு நெருக்கடியை ஏற்படுத்தி அசத்தினார்கள். இந்திய அணியிலும் தற்போது பலமிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், இம்முறை நியூசிலாந்திற்கு எதிராக அபார வெற்றியைப் பெற்றுவிடலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், தற்போது பெரிய பிரச்சினை ஒன்று எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக அதிரடி வீரரை களத்தில் இறக்கும் நியூசிலாந்து.. அணியில் முக்கிய மாற்றம்!

கடந்த போட்டியில், நெதர்லாந்துக்கு எதிராக 15ஆவது ஓவரில் முகமது சிராஜ் ஒரு கேட்சை பிடித்தார். அப்போது பந்து அவரது தொண்டையில் பட்டது. இதனால், உடனே பெவிலியன் திரும்பினார். ஆனால், அதன்பிறகு முகமது சிராஜ் குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை. இதனால், அரையிறுதி ஆட்டத்தில் சிராஜ் பங்கேற்க மாட்டாரோ என்ற அச்சம் எழுந்துள்ளது. சிராஜ் இல்லையென்றால், அது இந்திய அணிக்கு நிச்சயம் பெரிய பின்னடைவுதான்.

இந்திய உத்தேச அணி

ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ் / பிரசித் கிருஷ்ணா.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...