சச்சினின் 27 ஆண்டுகள் சாதனையை முறியடித்து மிரட்டிய இந்திய வம்சாவளி வீரர்  ரச்சின்!

நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் பெற்றோர், ராகுல் மற்றும் சச்சின் பெயர்களை இணைத்து ரச்சின் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

சச்சினின் 27 ஆண்டுகள் சாதனையை முறியடித்து மிரட்டிய  இந்திய வம்சாவளி வீரர்  ரச்சின்!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 27 ஆண்டுகள் சாதனையை இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா 42 ரன்கள் சேர்த்து முறியடித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் பெற்றோர், ராகுல் மற்றும் சச்சின் பெயர்களை இணைத்து ரச்சின் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இதுவரை 8 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள ரச்சின் ரவீந்திரா 3 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட 523 ரன்களை விளாசியுள்ளார். 

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணிக்கு கான்வே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்த போட்டியில் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, உலகக்கோப்பை தொடரில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 565 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரச்சின் ரவீந்திரா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

அத்துடன், 25 வயதிற்குள் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். 

1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 523 ரன்கள் விளாசி இருந்தார். அதனை ரச்சின் ரவீந்திரா முறியடித்ததுடன், அறிமுக உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரச்சின் ரவீந்திரா முதலிடத்தை பிடித்துள்ளார். 

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 11 இன்னிங்ஸ்களில் 532 ரன்கள் சேர்த்தார். இதனையும் ரச்சின் ரவீந்திரா முறியடித்துள்ளார். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp