ஜடேஜாவுக்கு கிடைத்த பதவி.. இதுதான் காரணமா.. பிசிசிஐ செய்த தில்லுமுல்லு.. ரசிகர்கள் குமுறல்!
டி20 அணி மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள ரவீந்திர ஜடேஜா, கடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் கூட ஆடவில்லை.
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜாவுக்கு டி20 அணியில் துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.
டி20 அணி மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள ரவீந்திர ஜடேஜா, கடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் கூட ஆடவில்லை. காயம் மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு வருடமாக அவர் டி20 அணியில் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், திடீரென ரவீந்திர ஜடேஜாவை மீண்டும் டி20 அணியில் சேர்த்துள்ள பிசிசிஐ அவருக்கு டி20 அணியில் துணை கேப்டன் பதவியையும் வழங்கியுள்ளது. டி20 அணியின் தற்காலிக கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். அவருக்கு துணை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 15 மாதங்களாக டி20 அணியில் இடம் பெறாத ஒருவரை ஏன் துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது மட்டுமின்றி ஒருநாள் அணிக்கு துணை கேப்டனாக யாரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை. அதே போல டி20 அணிக்கும் யாரையும் அறிவிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், ரவீந்திர ஜடேஜாவை அறிவித்து இருக்கின்றனர்.
22 வயதில் இந்திய அணியில் வாய்ப்பு... தமிழக வீரர் சாய் சுதர்ஷனுக்கு கிடைத்த அதிஷ்டம்!
சூர்யகுமார் யாதவ், ஜடேஜாவை விட குறைந்த அனுபவம் கொண்ட வீரர் என்பதால் அவரது கேப்டன்சியில் ஜடேஜா ஆடுகிறார் என்றால் அவருக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பிசிசிஐ அவரை துணை கேப்டனாக நியமித்துள்ளது என்று கூறப்படுகின்றது.
ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி
ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். , முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.
டி20 தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.