ஜெர்சியை மாற்றிய ரோஹித் சர்மா - டேவிட் பெக்காம்... ஏன் தெரியுமா? வைரல் தகவல்!
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில், நேற்று முன்தினம் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியை நேரில் காண வந்திருந்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அரையிறுதி போட்டியை காண முன்னாள் வீரர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
இந்த நிலையில், போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை டேவிட் பெக்காம் சந்தித்து பேசியுள்ளார்.
சந்திப்பின் போது, ரோஹித் சர்மா ஜெர்சியை டேவிட் பெக்காமும், டேவிட் பெக்காமின் ஜெர்சியை ரோஹித் சர்மாவும் அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.