ஓரங்கட்டப்படும் கோலி, ரோகித்.. என்ன நடக்குது... ஆகாஷ் சோப்ரா சந்தேகம்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 3ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல உள்ளது.

ஓரங்கட்டப்படும் கோலி, ரோகித்.. என்ன நடக்குது... ஆகாஷ் சோப்ரா சந்தேகம்!

இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை.

இதனால், இந்த விடயத்தில் மர்மம் உள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சந்கேகத்தை கிளப்பியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 3ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல உள்ளது.

அங்கு 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யார் செயல்பட போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இதன் காரணமாக ரோகித் சர்மாவை இந்திய டி20 அணிக்கு தலைமையேற்க பிசிசிஐ அவரிடம் கேட்டு வருகிறது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே டி20 போட்டிகளில் விளையாடவில்லை. 

இதற்கான காரணமும் பிசிசிஐ தரப்பில் அளிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரோகித் சர்மா சோகத்தில் இருக்கிறார். இதனால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பிசிசிஐ தரப்பில் அவரிடம் டி20 கேப்டன்சியை ஏற்குமாறு நிர்வாகிகள் சமாதானம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டன்சியை உதறி தள்ளும் மனநிலையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். 

இல்லையென்றால் பிசிசிஐ தரப்பில் எதற்காக ரோகித் சர்மாவிடம் சமாதானம் பேச வேண்டும். அவர் வேண்டாம் என்று கூறியிருப்பதால் மட்டுமே, சமாதானம் செய்ய வேண்டிய தேவை பிசிசிஐ-க்கு எழுந்துள்ளதாக நினைக்கிறேன்.

இவ்வளவு ஏன், கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணி ஆடிய ஒரு டி20 போட்டிக்கு கூட தேர்வு செய்யப்படவில்லை. அதுதான் மிகப்பெரிய மர்மமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp