சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பதை பிசிசிஐ தடுக்கிறதா? கிளப்பியுள்ள சர்ச்சை!
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இனி விளையாட மாட்டேன் என விராட் கோலி சொல்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 50 ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்து சச்சின் சாதனையை விராட் கோலி முறியடித்த நிலையில், டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொள்வதாக பிசிசிஐயிடம் தெரிவித்ததாக செய்தி வெளியானது.
அணிக்காக விளையாடுவது தான் என்னுடைய முதல் நோக்கம் என்றும் அணி வெற்றி பெற வைக்க நான் எவ்வளவு வேண்டுமானாலும் கடுமையாக உழைப்பேன் என்று விராட் கோலி கூறும் நிலையில், கோலியின் விலகள் குறித்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
விராட் கோலி தற்போது டெஸ்டில் 29 சதம் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதம், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என மொத்தம் 80 சதம் அடித்து உள்ளதுடன், முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
இந்த நிலையில் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்து விடக்கூடாது என்பதற்காக அவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து பிசிசிஐ நீக்கி விட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஹர்திக் பாண்டியா கனவு கலைந்தது... மண்ணை வாரி போட்ட பிசிசிஐ.. கேப்டன் கனவு அவ்வளதானா?
அத்துடன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இனி விளையாட மாட்டேன் என விராட் கோலி சொல்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனினும், இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் ரெக்கார்டுகள் உடைக்கப்பட்டால் அதனை பிசிசிஐ கொண்டாடவும் தயாராக தான் இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் விராட் கோலி விளையாடினால் அந்தத் தொடரின் மதிப்பு வேற லெவலுக்கு சென்று விடும் என்றும், இதன் மூலம் வருமானம் இரட்டிப்பாக கூட கிடைக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்த நிலையில், தங்களுக்கு கிடைக்கும் வருமானத்திற்காக விராட் கோலியை யாரும் விளையாட வேண்டாம் என்று சொல்லி இருக்க மாட்டார்கள் என்றும் இது விராட் கோலியின் தனிப்பட்ட முடிவாக தான் இருந்திருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.