நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி எவ்வாறு இருக்கும்? சம்பவத்துக்கு வாய்ப்பு இருக்கா?

இந்த தொடர் முழுவதும் பெரும்பாலும் இந்திய அணி பிளேயிங் லெவனை பெரியளவில் மாற்றவில்லை. 

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி எவ்வாறு இருக்கும்? சம்பவத்துக்கு வாய்ப்பு இருக்கா?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் இன்று பல பரிட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. 

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கப் போகிறது என்பதை ஆராயலாம். இந்த தொடர் முழுவதும் பெரும்பாலும் இந்திய அணி பிளேயிங் லெவனை பெரியளவில் மாற்றவில்லை. 

நெதர்லாந்து அணிக்கு எதிராக களம் இறங்கிய அதே வீரர்கள் தான் இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு இருக்கிறது. தொடக்க வீரராக ரோகித் சர்மா, கில் ஜோடியும் நடு வரிசையில் விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் - கே எல் ராகுலும், கீழ் வரிசையில் ஜடேஜாவும் மற்றும் சூரியகுமார் யாதவும் இடம்பெற உள்ளனர். 

குல்திப் யாதவ் சுழற் பந்துவீச்சாளராக இடம்பெறுவார். வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ், முஹமது ஸமி, பும்ரா ஆகிய மூன்று வீரர்களும் கடைசி மூன்று வீரராக இடம்பெற உள்ளனர்.

இந்த 11 வீரர்களை தவிர வேறு யாரும் விளையாட வாய்ப்பு இல்லை. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற முதல் பத்து ஓவரில் இந்திய வீரர்கள் விக்கெட் விழாமல் விளையாட வேண்டும். 

ரோகித் சர்மா மற்றும் கில் அதிரடியாக விளையாடி 10 ஓவர்களுக்கு 90 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும். இதில் யாரேனும் ஒருவர் சதம் அடித்தால் அணிக்கு நல்லது.
விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ராகுல் ஆகியோர் நிலைத்து நின்று கடைசி வரை விளையாட வேண்டும். 

அதன்பிறகு கடைசி ஐந்து சூரியகுமார் மற்றும் ஜடேஜா ஆகியோர் தங்களுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் அரை இறுதியில் குவித்தால் வெற்றி வாய்ப்பு நிச்சயம் இந்தியாவுக்கு கிடைக்கும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...