தென் ஆப்பிரிக்க தொடர்... அணிக்கு திரும்பும் ரோகித்.. முக்கிய வீரரருக்கும் வாய்ப்பு?... அதிரடி தகவல்கள் இதோ!
உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சூரியகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்று வழி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அடுத்த வருடம் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு ரோகித் சர்மா மீண்டும் திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், விராட் கோலி விளையாடுவாரா என்பதும் சந்தேகமாக இருக்கிறது.
அத்துடன், ரோகித் சர்மா வராவிட்டால் யார் கேப்டனாக டி20 உலகக் கோப்பைக்கு அணியை வழிநடத்துவார்கள், எந்த மாதிரியான இளம் வீரர்கள் அணியில் இடம் பெறுவார்கள் என்பது தொடர்பில் கேள்விகள் உள்ளன.
இந்த நிலையில், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முக்கியமான செய்தி வெளியாகியிருக்கிறது.
டி20 உலகக்கோப்பையில் முதல்முறையாக உகாண்டா.. ஜிம்பாப்வேவை வீழ்த்தி வரலாற்று ட்விஸ்ட்!
அதாவது, இந்திய அணி டிசெம்பர் மாதம் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு பயணப்படுகிறது.
இந்தத் தொடரில் டெஸ்ட் தொடருக்கு மட்டும் இல்லாமல் டி20 தொடருக்கும் இந்திய அணியை கேப்டனாக ரோஹித் சர்மா வழிநடத்துகிறார் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் கேஎல்.ராகுல் அணியை வழிநடத்துவார் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு முக்கியமான தகவலாக தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு தரப்படாத சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரப்படும் என்று கூறப்படுகிறது.
இதில் மேலும் ஒரு அதிரடியாக, ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் இளம் வலதுகை பேட்ஸ்மேன் ரஜத் பட்டிதாருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.