இலங்கை அணியின் தோல்விக்கு பின் பெரிய சதி.. உண்மையை வெளிப்படுத்த போகிறேன்... தேர்வுக் குழு தலைவர் அதிரடி!
தொடர்ந்து வந்த உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அத்துடன், 9 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விகளுக்கு பின்னால் சதிவேலை இருப்பதாக தெரிவித்து இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் பிரமோதயா விக்ரமசிங்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டி வரை இலங்கை அணிமுன்னேறிய போதும், இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 50 ரன்களில் ஆட்டமிழந்தது.
தொடர்ந்து வந்த உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அத்துடன், 9 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
இதை அடுத்து இலங்கையில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதுடன், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் வெடித்தது.
இதனையடுத்து, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் கலைத்து உத்தரவிட்டார். பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்று தடையுத்தரவு பெறப்பட்டது.
இந்த நிலையில், அரசாங்கம் கிரிக்கெட் அமைப்பில் தலையிடுவதாக கூறி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கையை தற்காலிகமாக உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த நிலையில், இலங்கை அணியின் தோல்வி குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவரும், முன்னாள் இலங்கை அணி வீரருமான பிரமோதய விக்கிரமசிங்க, இலங்கை விமான நிலையத்தில் வைத்து கருத்து வெளியிட்டார்.
"எனக்கு இரண்டு நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள். எல்லாவற்றையும் நான் சொல்கிறேன். இதன் பின்னணியில் வெளியில் இருந்து சில சதி வேலைகள் நடந்துள்ளது." எனக் கூறி பரபரப்பை கூட்டியுள்ளார்.