தடை விதிக்கப்பட்ட நிலையிலும் 52 சர்வதேச போட்டிகளில் விளையாடும் இலங்கை... திடீர்னு என்ன நடந்தது?
உலக கோப்பையில் இலங்கை அணி மோசமான செயல்பாட்டுடன் அணி நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருப்பதாக கூறி சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் நிறுவத்துக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
உலக கோப்பையில் இலங்கை அணி மோசமான செயல்பாட்டுடன் அணி நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருப்பதாக கூறி சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் நிறுவத்துக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
ஆசிய கோப்பை தொடரிலும் இலங்கை பெரிய அளவில் சாதிக்கவில்லை என்பதால், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை விளையாட்டு துறை அமைச்சர் கலைத்த நிலையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது எனக்கூறி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி தடை விதித்திருந்தது.
இதனால் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை விளையாடுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி வழக்கம்போல் இருதரப்பு தொடர்களில் விளையாட ஐசிசி அனுமதி அளித்துள்ளது.
இதை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி 2024 ஆம் ஆண்டு விளையாட போகும் தொடர் குறித்து அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி இலங்கை அணி சொந்த மண்ணில் ஜிம்பாப்வே உடன் 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஜனவரி மாதம் விளையாட உள்ளது.
அதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் ,3 ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் கொண்ட தொடரில் இலங்கை விளையாடுகிறது. தொடர்ந்து பங்களாதேசத்துக்கு சென்று ஒரு நாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.
ஜூலை மாதம் இலங்கையில், இந்தியாவை எதிர்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டி கொண்ட தொடரில் இலங்கை விளையாடுகிறது.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து உடன் இலங்கை விளையாட உள்ளது.
இலங்கை அணி அடுத்த ஆண்டு மட்டும் 52 சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.