மானத்தை காப்பாற்றிய ரிங்கு சிங்.... காலை வாரிய வீரர்கள்.. இந்தியா  த்ரில் வெற்றி!

9.1 ஓவரில் எல்லாம் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. இசான் கிஷன் 37 பந்துகளில் அரைசதம் கடக்க, சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

மானத்தை காப்பாற்றிய ரிங்கு சிங்.... காலை வாரிய வீரர்கள்.. இந்தியா  த்ரில் வெற்றி!

உலககோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றதுக்கு ரசிகர்கள் சூர்யகுமார் யாதவை விமர்சித்த நிலையில், அதற்கு தன்னுடைய பேட்டிங் மூலம் நேற்று தனி ஆளாக நின்று 42 பந்துகளில் 80 ரன்கள் குவித்து பதிலடி தந்தார். 

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரராக ஸ்மித் களமிறங்கி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தார். ஸ்மித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமும், மேத்தீவ் ஷார்ட் 13 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். 

மார்கஸ் ஸ்டோனிஸ் 7 ரன்களில் வெளியேற, சிறப்பாக விளையாடிய ஜாஸ் இங்கிலிஷ் 50 பந்துகளில் 110 ரன்களை குவித்தார். இதில் 8 சிக்சர்களும், 11 பவுண்டரிகளும் அடங்கும். 

இதன் மூலம் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், ருதுராஜ் பந்துகளையே எதிர்கொள்ளாமல் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

அதிரடியாக விளையாட முற்பட்ட ஜெய்ஸ்வால் 21 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவும், இசான் கிஷனும் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்தனர். 

இதன் காரணமாக 9.1 ஓவரில் எல்லாம் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. இசான் கிஷன் 37 பந்துகளில் அரைசதம் கடக்க, சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இதனால் இந்திய அணி 14.2 ஓவரில் எல்லாம் 150 ரன்களை தொட வெற்றி எளிதானது. அப்போது இஷான் கிஷன் 39 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து கேட்ச் ஆனார். இதனால் ஆட்டத்தில் டிவிஸ்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூர்யகுமார் 42 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இதில் 9 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

ஐபிஎல் ஸ்டார் வீரர் ரிங்கு சிங் மற்றும் அக்சர் பட்டேல், இந்தியாவின் வெற்றியை நோக்கி விளையாடினார். ஆனால் அக்சர் 2 ரன்களில் வெளியேற, ஆட்டத்தில் டிவிஸ்ட் ஏற்பட்டது. 

3 பந்துகளில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் இந்தியா இருந்தது. அப்போது ரவி பிஸ்னாய் ரன் அவுட்டாக, இந்தியாவின் வெற்றிக்கு 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ரசிகர்கள் டென்ஷன் ஆனார்.

அப்போது மீண்டும் ஆர்ஸ்திப் சிங் 2வது ரன் ஓடும் போது ரன் அவுட் ஆனார். இதனால் ஒரு பந்துக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. அப்போது கடைசி பந்தில் ரிங்கு சிங் சிக்சர் விளாசினார். ஆனால் அது நோ பாலாக மாற, அந்த சிக்சர் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. இதன் மூலம் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp