நிரந்தர கேப்டன் ஆகும் வாய்ப்பு... சூர்யகுமார் யாதவுக்கு அடிச்ச அதிஷ்டம்... செம ட்விஸ்ட்!
இதுவரை நடந்த டி20 தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா என பல வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.
டி20 உலகக்கோப்பை நெருங்கும் நிலையில் இந்திய அணிக்கு கேப்டனாக யார் செயல்படுவார் என்ற கேள்வி தலைதூக்கியுள்ள நிலையில்,யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக சூர்யகுமார் யாதவ் நிரந்தர கேப்டன் ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் என கூறிப்பட்டாலும், கடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ரோஹித் சர்மா இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இதுவரை நடந்த டி20 தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா என பல வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.
எனினும், ஹர்திக் பாண்டியா தான் இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டன் பதவியை பிடிப்பார் என கூறப்பட்ட நிலையில், அவர் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் காயத்தில் சிக்கினார்.
ஐபிஎல் தொடர் முடிந்த உடன் டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பிக்கவுள்ளதாக, அதற்குள் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்து விடுவாரா? என்பது இதுவரை உறுதியில்லை.
இந்திய டி20 அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம்? திணறும் பிசிசிஐ... விவரம் இதோ!
அப்படி காயத்தில் இருந்து மீண்டு வரும் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் பங்கேற்று விட்டு, அடுத்த சில நாட்களில் நீண்ட டி20 தொடரில் பங்கேற்பது என்பது கடினம்.
இந்த நிலையில், ரோஹித் சர்மாவை டி20 அணிக்கு திரும்பி கேப்டனாக டி20 உலகக்கோப்பையில் அணியை வழிநடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால், ரோஹித் சர்மாடி20 அணியை இளம் வீரர்கள் கையில் கொடுத்துவிட்டு ஒதுங்கும் மனநிலையில் உள்ள நிலையில், தற்போது ஆஸ்திரேலிய டி20 தொடரில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ் அடுத்து நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்கா டி20 தொடரிலும் அணியை வழிநடத்த அதிக வாய்ப்பு உள்ளது.
ரோஹித் சர்மா, பாண்டியா ஆகியோர் இந்திய டி20 அணிக்கு திரும்பாத பட்சத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியா டி20 உலகக்கோப்பையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.