ரோஹித் சர்மா அதிர்ஷ்டமே இல்லாதவர்.. பகிரங்கமாக கூறிய ஆஸ்திரேலிய வீரர்! 

2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை  ஆஸ்திரேலிய அணி வென்றது.

ரோஹித் சர்மா அதிர்ஷ்டமே இல்லாதவர்.. பகிரங்கமாக கூறிய ஆஸ்திரேலிய வீரர்! 

2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை  ஆஸ்திரேலிய அணி வென்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் அபார ஆட்டம் ஆடி 120 பந்துகளில் 137 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பை வென்றது.

இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய ட்ராவிஸ் ஹெட், அசாதாரண கேட்ச் ஒன்றை பிடித்து இருந்தார். ரோஹித் சர்மா 47 ரன்கள் எடுத்த நிலையில், பவுண்டரி அடிக்க முயற்சி செய்து, பந்தை நேராக தூக்கி அடித்தார், 

அப்போது ட்ராவிஸ் ஹெட் அசுர வேகத்தில் ஓடிச் சென்று கடினமான அந்த கேட்சை பிடித்தார். அது போட்டியில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. 

அது குறித்தும், தன் சதம் குறித்தும் போட்டி முடிந்த பின் ஆட்டநாயகன் விருதை வாங்கும் போது பேசிய ட்ராவிஸ் ஹெட், ரோஹித் சர்மாவை இந்த உலகிலேயே அதிர்ஷ்டம் இல்லாத நபர் என குறிப்பிட்டு பேசினார்.

ட்ராவிஸ் ஹெட் பேசுகையில், "உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்ததை நான் எதிர்பார்க்கவே இல்லை. சிறப்பான நாள் இது. முதல் 20 பந்துகள் நான் ஆடியது எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது. அதனால், தொடர்ந்து ஆடினேன். டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது பெரிய அளவில் உதவி செய்தது." என்றார்.

மேலும் அந்த கேட்ச் குறித்து கேட்ட போது, "இந்த உலகிலேயே அதிர்ஷ்டம் இல்லாத நபர் ரோஹித் சர்மாவாகத்தான் இருக்க முடியும். பீல்டிங்கில் நான் கடும் முயற்சி செய்து அந்த கேட்ச்சை பிடித்தேன். அந்த கேட்ச்சை பிடிப்பேன் எனவும் நான் நினைக்கவில்லை." என்றார் ட்ராவிஸ் ஹெட்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp