இந்திய ஏ அணியில் கூட அதிவேக பந்துவீச்சாளருக்கு இடமில்லை.. இர்பான் பதான் கொந்தளிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய அணிப் பட்டியலில் எந்த அணியிலும் இந்திய வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் பெயர் இடம் பெறவில்லை.

இந்திய ஏ அணியில் கூட அதிவேக பந்துவீச்சாளருக்கு இடமில்லை.. இர்பான் பதான் கொந்தளிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய அணிப் பட்டியலில் எந்த அணியிலும் இந்திய வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் பெயர் இடம் பெறவில்லை.

சாஹல், சர்ப்ராஸ் கான், நவ்தீப் சைனி, கேஎஸ் பாரத் போன்ற இந்திய அணியில் கடந்த சில மாதங்களாக வாய்ப்பு பெறாத வீரர்களுக்கு கூட இந்தியா ஏ அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

அண்மைய காலங்களில் இந்திய ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் இடம் பெற்ற உம்ரான் மாலிக் இந்தியா ஏ அணியில் கூட இடம் பெறாத நிலையில் முன்னாள் இந்திய அணி வீரரும், வேகப் பந்துவீச்சாளருமான இர்பான் பதான் பிசிசிஐ உம்ரான் மாலிக்கை புறக்கணிப்பதை சுட்டிக் காட்டி கொதித்து உள்ளார்.

உம்ரான் மாலிக் தான் தற்சமயம் இந்தியாவில் அதிவேகத்தில் பந்துவீசக் கூடியவர். அவர் 157 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடி வருகிறார் உம்ரான் மாலிக். 

முன்னதாக அவரது திறமையை ஐபிஎல்-இல் கண்ட பிசிசிஐ தேர்வுக் குழு அவரை ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் தேர்வு செய்தது. 10 ஒருநாள் போட்டிகளில் 13 விக்கெட்களும், 8 டி20 போட்டிகளில் 11 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார் உம்ரான் மாலிக். 

அவர் கடைசியாக பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் அதிக ரன்களை வாரிக் கொடுக்கிறார் என்ற புகார் இருந்தது. அதனால் அவருக்கு அதன் பின் அணியில் இடம் மறுக்கப்பட்டது.

தற்போது 2023 உலகக்கோப்பை முடிந்து இந்திய அணி அடுத்தகட்ட இளம் வீரர்களை தயார் செய்யும் வகையில் தென்னாப்பிரிக்காவில் பல இளம் வீரர்களை அழைத்துச் சென்று இந்தியா ஏ அணியில் ஆட வைக்க உள்ளது. 

கடந்த காலங்களில் இந்திய அணியில் இடம் பெற்று இப்போது அணியில் இடம் இல்லாமல் இருக்கும் வீரர்கள் தங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக இது அமையும் என கருதப்படுகிறது. ஆனால், இந்த அணியில் உம்ரான் மாலிக்கிற்கு இடம் அளிக்கப்படவில்லை. 

அதை சுட்டிக் காட்டி தன் கொதிப்பை வெளிப்படுத்தி இருக்கும் இர்பான், "சில மாதங்கள் முன்பு இந்திய அணியில் இருந்த வீரருக்கு நிச்சயம் இந்தியா ஏ அணியில் இடம் அளிக்கப்பட வேண்டும்" என பதிவிட்டு இருக்கிறார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp