கோலி ரொம்ப பிஸி.... பேசுறது இல்ல.. விரக்தியில் யுவராஜ்.. நடந்தது என்ன?

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஜொலித்து கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சம் தொட்ட யுவராஜ் சிங் பின்னர் உடல் நலத்தில் சரிவை கண்டு இந்திய அணியில்  தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடினார். 

கோலி ரொம்ப பிஸி.... பேசுறது இல்ல.. விரக்தியில் யுவராஜ்.. நடந்தது என்ன?

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் பங்கு மிக முக்கியமானது என்பதுடன், தொடரில் நாயகன் விருது யுவராஜ் சிங்குக்கு வழங்கப்பட்டிருந்ததை இங்கு நினைவு படுத்தலாம்.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஜொலித்து கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சம் தொட்ட யுவராஜ் சிங் பின்னர் உடல் நலத்தில் சரிவை கண்டு இந்திய அணியில்  தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடினார். 

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுவராஜ் சிங் தோனியின் தாமும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது என்றும் கிரிக்கெட்டுக்காக தான் நண்பராக இருந்தாக கூறியமை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் வெளியான வீடியோ ஒன்றில், முன்பு போல் விராட் கோலி இடம் தற்போது பேசுவது கிடையாது என்றும் விராட் கோலி தற்போது மிகவும் பிசியாகிவிட்டதால் அவரை தொந்தரவு செய்வதில்லை என்று யுவராஜ் சிங் பேசி இருக்கிறார். 

இளம் வயதில் விராட் கோலியின் பெயர் சீக்கு என்று கூறிய அவர், இன்று அந்த சீக்குவின் பெயர் விராட் கோலி, இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்றும்,  அனைவருமே இந்தியாவுக்காக விளையாடும் போது உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என நினைப்போம். ஆனால் விராட் கோலி கேப்டன் ஆக ஆன பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விராட் கோலி தன்னைத் தானே மிக சிறந்த கால்பந்து வீரர் என்று நினைத்துக் கொள்வார் என்றும், ஆனால் அவரை விட தனக்கு நிறைய திறமை இருக்கிறது என்றும் அவர் இளம் வீரராக இருப்பதால் நன்றாக ஓடுவார் என்றும் விராட் கோலி தன்னை ஒரு கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று நினைத்துக் கொள்வார் எனினும் உண்மை அதுவல்ல என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி கேப்டனாக இருந்த விராட் கோலி, யுவராஜ் சிங்கை அணியில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp