சேலை அணியாத ஆசிரியைகள்  - மறுப்பு தெரிவித்த அதிபர்

பாடசாலைக்குள் பிரவேசிப்பதாயின் சேலை அணிய வேண்டும் எனத் தெரிவித்து  பாடசாலைக்குள் அனுமதிக்க அதிபர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

சேலை அணியாத ஆசிரியைகள்  - மறுப்பு தெரிவித்த அதிபர்

பன்னிப்பிட்டிய - தர்மபால வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தில் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக சட்டை அணிந்து வந்த ஆசிரியை குழுவை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (16) பாடசாலை நடைபெறும் நாள் என்பதால் பாடசாலைக்குள் பிரவேசிப்பதாயின் சேலை அணிய வேண்டும் எனத் தெரிவித்து  பாடசாலைக்குள் அனுமதிக்க அதிபர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் பரீட்சைகள் ஆணையாளரின் கட்டுப்பாட்டில் இடம்பெறுவதால், இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லை என விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

எனினும், பாடசாலைக்கு என்று ஒரு குறிப்பிட்ட ஒழுக்கம் இருப்பதாகவும், பாடசாலைக்கு வரும் அனைவரும் அதைப் பின்பற்ற வேண்டும் என்று அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தை தற்காலிகமாக மூடுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp