ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஆப்பு வைக்கும் பிசிசிஐ.. காசுக்காக இப்படியா.? 2024ஆம் ஆண்டில் இதான் நிலை!

டி20 தற்போது முதல் இடத்தில் இருக்க டெஸ்ட் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஆனால் ஒரு நாள் கிரிக்கெட் தான் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஆப்பு வைக்கும் பிசிசிஐ.. காசுக்காக இப்படியா.? 2024ஆம் ஆண்டில்  இதான் நிலை!

டி20 கிரிக்கெட் காரணமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அழியும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணி அதிரடி, இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் என தற்போது ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

டி20 தற்போது முதல் இடத்தில் இருக்க டெஸ்ட் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஆனால் ஒரு நாள் கிரிக்கெட் தான் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

ஒருநாள் கிரிக்கெட் மீது ரசிகர்களின் கவனம் திரும்ப வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை எடுங்கள் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டை சவக்குழியில் தள்ளும் வேலையை ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. 2024 ஆம் ஆண்டு இந்திய அணி 14 டெஸ்ட் மற்றும் பல டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. 

பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் டிராவிட்.. அடுத்த பயிற்சியாளர் யார்? ரேசில் மூன்று பேர்!

ஆனால் இந்த ஆண்டு இந்திய அணி எத்தனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடப் போகிறது என்பதை அறிந்தால் நிலைமை புரியும்.

அதாவது, இந்த ஆண்டு இந்திய அணி, இலங்கைக்கு எதிராக நடைபெற உள்ள வெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலேயே விளையாட உள்ளது.

கொரோனா காலத்தில் கூட இந்திய அணி இதைக் காட்டிலும் அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. இந்திய அணி ஒருநாள் போட்டியை கை கழுவி வருவது பிசிசிஐ செய்யும் சதியாக தான் பார்க்கப்படுகிறது.

ஒரு நாள் கிரிக்கெட் நடக்கும் வேலையில் டி20 போட்டிகளில் நடத்தினால் அதிக வருமானம் கிடைக்கும். மேலும் நேரமும் குறைவு என்பதால் பிசிசிஐ இந்த செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

குறைந்தபட்சம் 10 ஒரு நாள் போட்டிகளுக்கு மேல் விளையாடினால் தான் அது வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கும் நன்மையாக இருக்கும் என்று கிரிக்கெட் ஜாம்பவாக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஒருநாள் கிரிக்கெட்டை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுங்கள் என்று ரசிகர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்திய அணி இந்த ஆண்டு வெறும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட போகிறது என்பதை தெரிந்துதான் விராட் கோலியின் ரோகித் சர்மாவும் நடப்பாண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் என்று கூறப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...