12 ஆண்டுகளாக யாரும் நெருங்க முடியாத இந்திய அணியின் கோட்டை.. நீளும் வெற்றிப் பாதை!

8 அணிகள் முயற்சித்தும் இந்தியாவின் வெற்றிக் கோட்டையை மட்டும் எந்த அணிகளாலும் இதுவரை தகர்க்கவே முடியவில்லை.

12 ஆண்டுகளாக யாரும் நெருங்க முடியாத இந்திய அணியின் கோட்டை.. நீளும் வெற்றிப் பாதை!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை இழக்காத அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் எல்லாம் தங்களுடைய சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து உள்ளன.

ஆனால், 8 அணிகள் முயற்சித்தும் இந்தியாவின் வெற்றிக் கோட்டையை மட்டும் எந்த அணிகளாலும் இதுவரை தகர்க்கவே முடியவில்லை.

கடைசியாக 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியது. அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியை நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

பின்னர், 2015 ஆம் ஆண்டு மூன்றுக்கு 0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தியதுடன், 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியை மூன்றுக்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிப்பெற்றது.

அத்துடன், 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி 2017 ஆம் ஆண்டு வங்கதேசத்தை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தியது.

அத்துடன், ஆஸ்திரேலிய அணியை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியதுடன்,  இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றதுடன்,  வெஸ்ட் இண்டீஸ் அணியை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தியது.

2019 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவை 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்கடித்த இந்திய அணி, மீண்டும் 2019 ஆம் ஆண்டு வங்கதேசத்தை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றது.

நட்சத்திர வீரர்கள் இல்லை... ஆனாலும் நாங்க இங்கிலாந்த ஜெயிச்சதுக்கு இவர் தான் முக்கிய காரணம்; சுப்மன் கில் ஓபன் டாக்!

2021 ஆம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து அணியை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா தோற்கடித்த நிலையில், அதன் பிறகு நியூசிலாந்து அணியை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்கடித்தது.

மேலும், 2022 ஆம் ஆண்டு இலங்கையை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்ற இந்திய அணி 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்றது. 

தற்போது 2024 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணியை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா தோற்கடித்து இருக்கிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp