மேக்ஸ்வெல்லை வெளியேற்ற முயற்சித்த ஆப்கானிஸ்தான் பயிற்றுவிப்பாளர்.. அசையாத மேக்ஸ்வெல்!

இப்படி இருந்தால் எப்படி பந்து வீசுவது? என்று அழுத்தம் கொடுத்து கிளென் மேக்ஸ்வெல்லை ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேற்ற முயற்சி செய்தார்.

மேக்ஸ்வெல்லை வெளியேற்ற முயற்சித்த ஆப்கானிஸ்தான் பயிற்றுவிப்பாளர்.. அசையாத மேக்ஸ்வெல்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெளை வெளியேற்ற ஆப்கானிஸ்தான் பயிற்றுவிப்பாளர் எடுத்த முயற்சி மண்ணை கவ்வியது பற்றி பார்க்கலாம்.

நேற்றைய போட்டியில் வலியுடன் ஆடிய கிளென் மேக்ஸ்வெல்  கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த ஆட்டத்தை பதிவு செய்து இரட்டை சதம் அடித்தார்.

கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி, அறுவை சிகிச்சை செய்த கிளென் மேக்ஸ்வெல்லுக்கு, இந்த போட்டியில் இக்கட்டான நிலையில் விளையாட்டிய சந்தர்ப்பத்தில்  கடும் கால் வலி ஏற்பட்டது. 

அதனால், அடிக்கடி முதலுதவி செய்து கொண்டே விளையாடியதுடன், ஒரு கட்டத்தில் ஒரே ஓவரில் இரண்டு முறை வலியால் துடித்ததால். இரண்டு முறையும் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், 41வது ஓவரின் போது அவருக்கு மீண்டும் வலி அதிகரிக்க களத்தில் படுத்துவிட்டார். அதனால் பொறுமை இழந்த ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜொனாதன் டிராட், இது எத்தனை முறை நடக்கப் போகிறது என நான்காவது அம்பயரிடம் கேட்டார். 

இப்படி இருந்தால் எப்படி பந்து வீசுவது? என்று அழுத்தம் கொடுத்து கிளென் மேக்ஸ்வெல்லை ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேற்ற முயற்சி செய்தார்.

ஆஸ்திரேலிய கேப்டன் மேக்ஸ்வெல்லிடம் கேட்ட போதும், மேக்ஸ்வெல் வெளியேற மறுத்தார். அதனால் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் எடுத்த முயற்சி வீணானது.

இதனையடுத்து, கிளென் மேக்ஸ்வெல் வலிக்கு நடுவே ஆடி இரட்டை சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றமை நீங்கள் அறிந்ததே.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...