உலகக்கிண்ண வரலாற்றிலேயே படுமோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி
இதன்படி முதலில் களமறிங்கி இந்தியா அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தாலும் விராத் கோலி மற்றும் சுக்மன் கில்லின் அதிரடி அணிக்கு வலுவான நம்பிக்கையை அளித்தது.
உலகக் கிண்ண தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தெரிவுசெய்தது.
இதன்படி முதலில் களமறிங்கி இந்தியா அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தாலும் விராத் கோலி மற்றும் சுக்மன் கில்லின் அதிரடி அணிக்கு வலுவான நம்பிக்கையை அளித்தது.
இந்திய அணியின் முதல் விக்கெட் 4 ஓட்டங்களை பெற்றிருந்த போது வீழ்த்தப்பட்டது. அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா, 4 ஓட்டங்களுடன் மதுசங்க வீசிய யோக்கர் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.
2ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த விராத் கோலி மற்றும் சுக்மன் கில் ஆகியோர் 189 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டுவந்தனர்.
சுப்மன் கில் 92 ஓட்டங்களையும் விராத் கோலி 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், இறுதியாக அதிரடி காட்டிய ஸ்ரேஸ் ஐயர் 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இந்தியா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
358 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கையின் விக்கெட்டுக்கள் முதல் பந்தில் இருந்து மல மல வென சரிய தொடங்கின.
ஒரு வீரரால்கூட ஒரு ஓவரை முழுமையாக நின்ற ஆட முடியாத வகையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் அபாரமாக பந்துகளை வீசியிருந்தனர். 5 வீரர்கள் எவ்வித ஓட்டங்களை பெறாது பெவிலியன் திரும்பியிருந்தனர்.
இலங்கை அணியை பொறுத்தமட்டில் இரட்டை இலக்கத்தை மூன்று வீரர்கள் மாத்திரமே கடந்திருந்தனர்.
பந்துவீச்சில் அபாரமாக வீசிய மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் மொஹமட் சமி 5 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளதன் மூலம் புள்ளிப்பட்டியலில் தென்னாபிரிக்க அணியை பின்தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.