இறுதிப் போட்டி இனி ரொம்ப கஷ்டம்... புள்ளி பட்டியலில் சரிவு... இக்கட்டான நிலையில் இந்திய அணி!
இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்றால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிவிடும் என்ற நிலை காணப்பட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து முதல் இடத்தில் இருந்ததுடன், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்றால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிவிடும் என்ற நிலை காணப்பட்டது.
இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதால், நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடித்து இருக்கும்.
ஆனால், எதிர்பார்க்காத வகையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி சரிந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி 62.50 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளதுடன், இந்திய அணி தொடர்ந்து மூன்று டெஸ்ட்களில் தோல்வியை தழுவியதால் 58.33 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை அணி 55.56 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து அணி 54.55 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் இருக்கிறது.
ரோஹித் சர்மா அவ்வளவுதான்? இந்திய அணியின் கேப்டனாக பும்ரா.. அதிருப்தியில் ரசிகர்கள்
தென்னாப்பிரிக்க அணி 54.17 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் ஆறு ,ஏழு, எட்டு, ஒன்பது ஆகிய இடங்களில் உள்ளதுடன், இந்த நான்கு அணிகளால் இனி இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாது.
இந்த நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை நான்கு போட்டிகளில் வீழ்த்தினால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.