இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவதே பாகிஸ்தான் அணியின் இலக்கு.. இளம் வீரர் சவால்!

அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி முன்னேற இங்கிலாந்து அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய தேவை காணப்படுகின்றது.

இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவதே பாகிஸ்தான் அணியின் இலக்கு.. இளம் வீரர் சவால்!

இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவதே பாகிஸ்தான் அணியின் இலக்கும் என்று அந்த அணியின் இளம் வீரர் உசாமா மிர் கூறியிருக்கின்றார்.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி முன்னேற இங்கிலாந்து அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய தேவை காணப்படுகின்றது.

 தகுதிபெற வேண்டுமென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் விளையாடினால், பாகிஸ்தான் அணியின் கனவு கனவாகவே போய்விடும்.

முதலில் பேட்டிங் செய்து பாகிஸ்தான் 300 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணியை 13 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். ஒருவேளை 400 ரன்கள் சேர்த்தால் இங்கிலாந்து அணியை 112 ரன்களுக்கு கட்டுப்படுத்த வேண்டும். 

அதேபோல் 450 ரன்கள் சேர்த்தால் 162 ரன்களில் கட்டுப்படுத்த வேண்டும், 500 ரன்கள் சேர்த்தால் 211 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் இதற்கு வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் கோல்ஃப் விளையாட்டு, ஷாப்பிங் என்று நேரம் செலவிட்டு வருகின்றனர். இதன்பின் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் அணி வீரர்கள், ஃபீல்டிங்கில் செலவிட்டனர். 

இது தொடர்பில், பாகிஸ்தான் இளம் வீரர் உசாமா மிர் பேசுகையில், “இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் அறிவோம். அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. வீரர்கள் தங்களின் 100 சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகி வருகிறார்கள்.

பவுலிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட பயிற்சி மேற்கொண்டு வருகின்றோம். மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp