இந்திய அணியுடன் சேர்ந்து அம்பயர் சதி... பொங்கி எழுந்த வர்ணணையாளர்.. நடந்தது என்ன?

ஐந்தாவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் 160 ரன்கள் குவித்து, பின் ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய அணியுடன் சேர்ந்து அம்பயர் சதி... பொங்கி எழுந்த வர்ணணையாளர்.. நடந்தது என்ன?

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  டி20 தொடரை இந்தியா கைப்பற்றி அசத்தியுள்ளது. 

ஐந்தாவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் 160 ரன்கள் குவித்து, பின் ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சேஸிங் செய்த போது கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் அர்ஷ்தீப் சிங் வீசிய ஓவரின் முதல் பந்து மேத்யூ வேட் தலைக்கு நேராக வந்ததால் அந்த பந்தை வைடு என அறிவிக்குமாறு ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் கேட்டார்.

அதுமட்டும் இல்லாது, அதே ஓவரின் ஐந்தாவது பந்தை ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லிஸ் நேராக அடித்த போது அம்பயர் தன் மீது பட்டு விடுமோ என எண்ணி நகர, பந்து சரியாக அவர் மீது பட்டு கீழே விழுந்தது. 

இதனால், ஆஸ்திரேலியா பவுண்டரி அல்லது சில சிங்கிள் ரன்கள் எடுக்கும் வாய்ப்பை இழந்த நிலையில், இந்த இரண்டு சம்பவத்தையும் குறிப்பிட்டு நேரலையில் வர்ணனை செய்து கொண்டிருந்த மேத்யூ ஹெய்டன் பொங்கி எழுந்தார் . 

அவர் வர்ணனையில் பந்து அவர் தலைக்கு மேலே செல்கிறது என்றார். அடுத்து அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் அம்பயர் பவுண்டரியை தடுத்ததாக கருதிய ஹெய்டன் “அம்பயர் இரண்டாவது முறையாக தன் வேலையை செய்து இருக்கிறார்.  இந்த முறை பந்து நேராக சென்றது. அவர்கள் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார்கள்" என்று கூறினார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp