அரையிறுதியில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்! அப்படி நடக்கவில்லை என்றால் வெளியேறுவது உறுதி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தற்போது லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் முதலிடத்தில் இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது.

அரையிறுதியில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்! அப்படி நடக்கவில்லை என்றால் வெளியேறுவது உறுதி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தற்போது லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் முதலிடத்தில் இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது.

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு அணிகள் தற்போது தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறன. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை போன்ற பலம் வாய்ந்த அணிகள் முதல் சுற்றுலிருந்து வெளியேறிவிட்டன.

இதனால், சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு சுமாரான அணிகளுடன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். எனினும்,  மழையால் மற்ற அணிகள் வாய்ப்பு இழந்து செல்லும் நிலையில், இந்தியாவுக்கே அப்படி ஒரு ஆப்பு காத்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளை எதிர்கொள்ள உள்ள நிலையில், இரண்டில் இந்தியா வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவிடம் தோற்றால் கூட அரை இறுதிச் சற்றுக்கு சென்று விடலாம்.

வரும் ஜூன் 27ஆம் தேதி இந்திய அணி இரண்டாவது அரை இறுதியில் டயானாவில் பலப்பரீட்சை நடத்த வாய்ப்பு உள்ள நிலையில், அன்றைய நாளில் அங்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

மேலும் முதல் அரை இறுதிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது அரையிறுதிக்கு ரிசர்வ் நாள் இல்லை என்று ஐசிசி அறிவித்துள்ளது.

எனினும் போட்டி மழையால் பாதிக்கப்படுவதை தடுக்க கூடுதலாக நான்கு மணி நேரம் வரை காத்திருக்கலாம் என்றும் ஐசிசி விதியை மாற்றி உள்ளது.

எனினும், கயானா பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அன்றைய நாள் போட்டி நடத்த முடியாது என்றால், அது இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதுடன், விளையாடாமலேயே இந்திய அணி தொடரை விட்டு வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் சூப்பர் 8 சுற்றில் மூன்று போட்டிகளுமே வெற்றி பெற்று முதல் இடத்தை பிடிக்க வேண்டும். 

அப்படி நடந்தால் இரண்டாவது அரையிறுதி மழையால் ரத்தனால் கூட இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்று விடும். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...