பிளே ஆப் போகும் நான்கு அணிகள் இவைதான்... மும்பைக்கு ஆப்பு.. ஏற்பட்டுள்ள ட்விஸ்ட்!
நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் தொடர்பில் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் தொடர்பில் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அதன்படி, இறுதி நேரத்தில், மும்பை இந்தியன்ஸுக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐபிஎல் சீசனில், துவக்கத்தில் படுமோசமாக சொதப்பிய மும்பை இந்தியன்ஸ் அணி, தற்போது அபாரமாக ஆடி வருகிறது. முதல் 5 லீக் போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை பெற்ற மும்பை அணி, அடுத்த 5 லீக் போட்டிகளிலும் வெற்றிப்பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.
எனினும், துவக்கத்தில் அபாரமாக செயல்பட்டு வந்த பஞ்சாப் கிங்ஸ் தற்போது சொதப்பி வருகிறது. முதல் 4 லீக் போட்டியில் ஒரேயொரு தோல்வியை சந்தித்த அந்த அணி, அடுத்த 5 லீக் போட்டிகளில் இரண்டு வெற்றிகளைதான் பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு இல்லை.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதுடன், எஞ்சிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் ஆர்சிபி அணி, வென்றாலே போதும்.
மேலும் படிங்க | டெஸ்ட் தொடரில் இருந்து தானாகவே விலகும் ரோஹித் சர்மா: புது கேப்டன் யார் தெரியுமா?
அத்துடன், குஜராத் அணி, அடுத்த 6 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றாலே போதும். அடுத்த இரண்டு இடங்களுக்கு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் பலத்த போட்டி நிலவி வருகிறது.
இதில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது. அந்த அணி அடுத்து அடுத்த 5 லீக் போட்டிகளில் சிஎஸ்கே, லக்னோ, டெல்லி, மும்பை, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட விளையாட உள்ளது.
இதில், சிஎஸ்கே, லக்னோ, ராஜஸ்தான் ஆகிய அணிகளை சுலபமாக வீழ்த்த வாய்ப்புள்ளது என்பதால், பஞ்சாப்புக்கு பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது.
மும்பை அணி அடுத்த நான்கு லீக் போட்டிகளில் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளதுடன், இதில், இரண்டு வெற்றிகளை பெற்றாக வேண்டும்.
இதில், ராஜஸ்தானை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் நல்ல பார்மில் இருப்பதால், மும்பை அணிக்கு கடைசி நேரத்தில் பின்னடைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அடி, அடுத்த 5 லீக் போட்டிகளில் கேகேஆர், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைடன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடும்.
இதில், கேகேஆர், சன் ரைசர்ஸ் பார்ம் அவுட்டில் இருக்கிறது. இந்த அணிகளுக்கு எதிராக வென்றாலே, டெல்லி அணி பிளே ஆப் முன்னேறிவிடும்.
இதேவேளை, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி, 10 போட்டிகளில் 0-.325 நெட் ரன்ரேட்டுடன் 10 புள்ளிகளை பெற்று 6ஆவது இடத்தில் இருப்பதுடன், அடுத்த நான்கு லீக் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, குஜராத் டைடன்ஸ், சன் ரைசர்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்த 5 போட்டிகளில் லக்னோ மூன்று வெற்றிகளை பெற்றாக வேண்டும் என்பதால் அந்த அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதாக பார்க்கப்படுகின்றது. எனினும், போட்டிகளில் முடிவு வரை காத்திருக்க வேண்டும்.