இந்திய அணி கேப்டன் ரோஹித் இல்லையா? வெளியான பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்!

இது குறித்த அறிவிப்பை பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி அதற்கான பதிவில் ரோஹித் சர்மா புகைப்படத்தை கூட பயன்படுத்தவில்லை.

இந்திய அணி கேப்டன் ரோஹித் இல்லையா? வெளியான பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து அண்மையில் ரோஹித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, தற்போது இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த அறிவிப்பை பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி அதற்கான பதிவில் ரோஹித் சர்மா புகைப்படத்தை கூட பயன்படுத்தவில்லை.

அந்த பதிவில் கே எல் ராகுல் முன்னேயும், அவருக்கு பின்னே ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பும்ராவும் இடம் பெற்றுள்ளனர். ரோஹித் சர்மாவை குறி வைத்தே இப்படி நடந்துள்ளதாக ரசிகர்கள் கொதித்து போய் இருக்கின்றனர்.

பிசிசிஐ டெஸ்ட் அணியை அறிவித்த உடன் மும்பை இந்தியன்ஸ் தன் பங்கிற்கு அணி அறிவிப்பை வெளியிட்டது. 

பொதுவாக அணி அறிவிப்பு குறித்த போஸ்டர்களில் நிச்சயம் அணியின் கேப்டன் புகைப்படம் இடம் பெறும். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட போஸ்டரில் கே எல் ராகுல் படம் முன்னே இருக்கிறது. 

அதைப் பார்த்த ரசிகர்கள் பலர், இந்திய டெஸ்ட் அணிக்கு கே எல் ராகுல் தான் கேப்டனா? ரோஹித் சர்மா கேப்டன் இல்லையா? அவர் புகைப்படம் எங்கே? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் இடம் பெற்று இருந்த நிலையில் அவர்களில் பும்ரா படத்தை மட்டுமே மும்பை அணி பயன்படுத்தி உள்ளது. 

ரோஹித் சர்மாவை அந்த அணி விரும்பவில்லை என்பது இதில் இருந்தே தெரிவதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp